ஒரே வழக்கு.. 24 காட்சிகள் நீக்கம்..! ஒரு நொடியில் ஃபிளாப் ஆன எல்2எம்பூரான் திரைப்படம்..!
எல்2எம்பூரான் திரைப்படத்தின் 24 காட்சிகள் நீக்கத்தால் படம் ஃபிளாப் ஆகியுள்ளது.
மலையாள திரைப்பட நடிகரான பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமாக `எல் 2: எம்பூரான்' படம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தின் முதல் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. முதல் பாகத்தில் படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
இந்த சூழலில், இப்படம் குறித்து முன்னதாக பேசிய பிருத்விராஜ்,பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: 'எம்புரான்' பட சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்.. வருத்தம் தெரிவித்து பதிவு.!!
இப்படி இருக்க படம் மார்ச் 27ம் தேதி வெளியான நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள், இந்திய சினிமாவில் அரசியல் சார்ந்த சிறந்த திரில்லர் படமாக எல் 2 எம்புரான் படம் உள்ளது என்றும் டிரெய்லரில் மாஸாக காண்பித்து பின்பு திரையில் தமாசாக கதையை உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றாமல், டிரெய்லரில் காட்டியது போலவே மாஸாக ஆக்ஷன் காட்சிகளை காண்பித்து உள்ளனர்.
இப்படத்தில், ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பை எங்கும் குறையாத வண்ணம் பாதுகாத்து வைத்து இருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ். ஆனால் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் போக போக படம் மிரட்டி இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் மதவாத சண்டையை இந்த படம் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் சில அமைப்புகள் கூறியுள்ளனர். அதன் படி, எம்புரான் படத்தின் தொடக்கத்தில் 'வில்லன் பால்ராஜ்' இஸ்லாமிய குடும்பத்தை கூண்டோடு அழிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. மறறொரு வில்லன் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்யும் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்று உள்ளன.
ஏற்கனவே 'மார்கோ' என்ற படத்தில் கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுப்பது போன்ற கொடூரமான காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மத பிரச்னையை தூண்டும் விதமாக இப்படத்தின் பல காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், 24 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர் படக்குழுவினர். இதனால் படத்தில் சுவாரசியம் மற்றும் தொடர்ச்சி கதைகள் இல்லாமல், படம் பார்க்கவே நன்றாக இல்லை என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், முதலிலேயே படத்தை பார்த்து சென்சார் செய்யும் அதிகாரிகள் அதுவரை என்ன செய்தார்கள் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அரசியல் அழுத்தம் காரணமாக ஒட்டுமொத்த படமே சீர் குலைந்துவிட்டது. அருமையான படங்களை கெடுப்பதே இவர்களுக்கு வேலையாக உள்ளது எனவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த பிரச்சனையில் படத்தின் வசூலும் பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: எல்2 எம்பூரான் படத்திற்கு மோகன்லால் வாங்கிய சம்பளம்..! மஞ்சு வாரியருக்கு இவ்வளவுதான் சம்பளமா..?