வருமானவரி துறையினர் பிடியில் பிருத்விராஜ்...! எல் 2 எம்பூரான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் எல் 2 எம்பூரான் பட இயக்குனர் பிருத்விராஜ் வருமானவரி துறையினர் பிடியில் சிக்கி இருக்கிறார்.
பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமாக `எல் 2: எம்பூரான்' படம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தின் முதல் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. முதல் பாகத்தில் படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
படம் வெளியாவதற்கு முன்பாக நடைபெற்ற எல் 2 எம்பூரான் படத்திற்கான சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய பிருத்விராஜ், பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை, அவரது ஆசைக்கு நான் தடையாக இருக்கவில்லை அவ்வளவு தான்.
மேலும், படத்தினுடைய பட்ஜெட்டை நாங்கள் வெளியிடவில்லை ஆனால் படத்தை பார்க்கும்பொழுது அதன் பட்ஜெட் என்னவாக இருக்கும் என்பது உங்களால் கணக்கிட முடியும். அதுமட்டுமல்லாமல் பட்ஜெட் என்பது கேமராவிலோ, படம்பிடிக்கும் இடத்திலோ இல்லை அத்தனை நாள் உழைப்பில் உள்ளது.
இதையும் படிங்க: ஒரே வழக்கு.. 24 காட்சிகள் நீக்கம்..! ஒரு நொடியில் ஃபிளாப் ஆன எல்2எம்பூரான் திரைப்படம்..!
இப்படம் கிட்டத்தட்ட 143 நாட்கள் எடுக்கப்பட்டது. அத்தனை நாள் படப்பிடிப்பில் பல இயற்கை தடைகள் எங்களுக்கு வந்தது. ஆனால் என்னுடைய படக்குழுவினர் ஒருநாள் கூட அதற்காக ஒய்வு எடுக்கவில்லை கடுமையாக உழைத்தனர். இப்படம் உருவாவதற்கு முன்பாக இரண்டு வருடங்களாக இப்படத்தில் வேலை செய்திருக்கிறோம் என்கிறார்.
அவர் கூறியதை போல படமும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் இப்படத்தில் இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் மதவாத சண்டையை இந்த படம் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் சில அமைப்புகள் கூறி இருந்தனர். அதன் படி, எம்புரான் படத்தின் தொடக்கத்தில் 'வில்லன் பால்ராஜ்' இஸ்லாமிய குடும்பத்தை கூண்டோடு அழிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. மறறொரு வில்லன் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்யும் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்று உள்ளன.
ஏற்கனவே 'மார்கோ' என்ற படத்தில் கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுப்பது போன்ற கொடூரமான காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மத பிரச்னையை தூண்டும் விதமாக இப்படத்தின் பல காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், 24 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கி இறுகின்றனர் படக்குழுவினர். இதனால் படத்தில் சுவாரசியம் மற்றும் தொடர்ச்சி கதைகள் இல்லாமல், படம் பார்க்கவே நன்றாக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், எல்2 எம்புரான் திரைப்பட இயக்குநரான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இப்படி இருக்க, எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி தனியாக பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணத்தை கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பெற்று உள்ளார் பிரித்விராஜ். மேலும் கடுவா, ஜன கண மன மற்றும் கோல்ட் ஆகிய படங்களின் ஊதியம் குறித்தும் அவரிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: எல்2: எம்பூரான் திரைப்படத்தின் அபார வெற்றி..! பட்ஜெட்டை சொல்லி வாய் பிளக்க வைத்த பிருத்விராஜ்..!