நயன்தாராவுக்கு சுந்தர் சி வைத்த செக்..! மூக்குத்தி அம்மன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்..!
மூக்குத்தி அம்மன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குநர் சுந்தர் சி.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக அம்மனை வித்தியாசமான முறையில் காண்பித்த படம் என்றால் அதுதான் "மூக்குத்தி அம்மன்". இதுவரை ரம்யாகிருஷணனை அம்மனாக பார்த்தவர்களுக்கு சற்று மாடன் அம்மனாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றார் நடிகை நயன்தாரா.
குறிப்பாக கடவுளை பயபக்தியுடன் 'அம்மா...தாயே....எனக்கு உதவி செய்மா' என மக்கள் அழைக்கும் காலம் போய் இப்படத்தில் அம்மனை "உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம்" என பாட்டு பாடி ஆர்.ஜே.பாலாஜி அழைக்க, உடனே அம்மன் வந்து பதில் கொடுப்பார்.
அப்படி பட்ட படத்தில், ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்து அனைவராலும் கொண்டாடப்பட்ட நயன்தாரா இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க, நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான, ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் "மூக்குத்தி அம்மன்-2"யை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வந்தன.
இதையும் படிங்க: "நிக்க தேவை பூமாதா.. நாம வாழ தேவ கோமாதா".. தமன்னாவின் டையலாக்கில் மிரட்டும் ஓடேலா-2..!
இதனை உறுதி படுத்தும் வகையில், சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்திற்காக, காண்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உண்மையான கோயில் போன்ற பெரிய செட் அமைக்கப்பட்டது. படம் எடுப்பதற்கு முன்பாகவே தனது மகன்களுடன் ஒரு மாதகாலமாக விரதம் எடுத்து வந்த நயன்தாரா, பயபக்தியின் உச்சத்துக்கே சென்று இப்படப்பிடிப்புக்கான பூஜைக்கு சிவப்பு நிற புடவையில் வந்து அம்மனாகவே காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீனாவை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், இப்படத்தின் பட்ஜெட் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, படம் தொடங்கும் பொழுது ரூ.55 கோடி மேட்டுமே பட்ஜெட் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டி கழித்து பார்த்தால் இப்படத்தின் பட்ஜெட் தற்பொழுது ரூ.112 கோடியாக மாறியுள்ளது எனவும் அந்த அளவிற்கு காட்சிகள் படமாக்கப்படுகிறது எனவும் தற்பொழுது வரை நடிகை நயன்தாரா தனது சம்பளத்தில் பாதி மட்டுமே வாங்கியுள்ளதாகவும் மீதி சம்பளமாக வேண்டாம், படத்தின் லாபத்தில் இருந்து பங்கு கொடுங்கள் என கேட்டுள்ளார் என்றும் முத்த பத்திரிகையாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நயன்தாராவிற்கும் சுந்தர் சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் படத்திலிருந்து விலக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இதற்கு பதில் தரும் விதமாக மூக்குத்தி அம்மன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 'நடிகை குஷ்பு' இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்தார். அவர் கூறுகையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல், இயக்குனர் சுந்தர்.சி மிகவும் அனுபவமிக்க, புத்திசாலியான இயக்குனர். அவரைப்போல், நயன்தாராவும் திறமையான தொழில் முறை சார்ந்த நடிகை என்பதால் இருவருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. எனவே, மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியான முறையில் நடந்து வருகிறது.
அதனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். நாங்களும் இந்த வதந்திகளை எங்கள் படத்திற்கு வந்த திருஷ்டியாக எடுத்துக் கொள்கிறோம். பொழுதுபோக்கான ஒரு மிகச் சிறந்த மெகா ஹிட் படத்திற்காக அனைவரும் காத்திருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
இப்படி இருக்க, மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நயன்தாரா மிகவும் மோசமாக நடந்து கொண்டு வருவதாகவும் இயக்குனருடன் சண்டையிட்டு வருவதாகவும் பலர் கூறிவந்த நிலையில், தற்பொழுது, படப்பிடிப்பு தளத்தில் பல நம்ப முடியாத ஆச்சரியங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. முன்பு எல்லாம் மிகவும் கோபமாக நடந்து கொண்ட நயன்தாரா தற்பொழுது அனைவரிடமும் பாசமாக பேசி வருகிறாராம்.
அதற்கு பின், நயன்தாராவிற்கான காட்சிகள் முடிந்தாலும் பிறர் நடிப்பதை பார்த்துவிட்டு அவர்களுடன் கொஞ்சம் அரட்டை அடித்து விட்டுதான் கேரவனுக்கே செல்கிறாராம். இதை பார்த்த பலருக்கு சந்தேகம் வர பின்பு தான் சுந்தர் சி வைத்த செக் என்ன வென்று தெரிந்தது.
என்னவெனில், சுந்தர் சி-யின் சிறந்த மற்றும் பிடித்தமான நடிகை என்ற லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது தமன்னா என்பதால், நயன்தாராவை மூக்குத்தி அம்மன் படத்தில் தூக்கிவிட்டு தமன்னாவை வைக்க திட்டமிட்டு இருந்தாராம்.
இதனை அறிந்த நயன்தாரா, ஏற்கனவே அனுஷ்கா மீண்டும் வந்ததால் நம் "லேடி சூப்பர் ஸ்டார்" பட்டம் போனதை போல், சுந்தர் சி-யின் கோபத்தால் தமன்னாவின் புகழ் ஓங்கிவிட்டால் என்ன செய்வது என நினைத்து, தற்பொழுது அமைதியான பிள்ளையாக ஒழுக்கமுள்ள பிள்ளையாக மாறி நல்ல விதமாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!