ஆஸ்கரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள்..! நிம்மதி பெருமூச்சில் இந்திய இயக்குனர்கள்..!
புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது ஆஸ்கர் நிறுவனம்.
ஒரு நல்ல காரை மக்கள் உபயோகப்படுத்த பாதுகாப்பு என்ற தேர்வை கடந்து ஐந்திற்கு குறைந்த பட்சம் நான்கு ஸ்டார்களையாவது பெற வேண்டும் அப்படி பெற்றால் தான் அந்த காரை நம்பி மக்கள் வாங்கி செல்வர். அதே போல நம் நாட்டிலும் ஒரு படம் வெளியாக வேண்டும் என்றால் அந்த படத்திற்கு தகுந்த சான்றுகளை சினிமா தனிக்கை குழு கொடுக்க வேண்டும்.
அப்படி செய்தால் தான் அந்த படத்தை காண மக்கள் கூட்டம் பெருகும். இப்படி சாதாரண தீப்பெட்டியில் இருந்து கண்களில் காணும் சினிமா வரை அதன் தரத்தை மதிப்பிடும் பொழுது, உலக அளவில் கிடைக்கும் விருதுகளுக்கு ஆராய்ச்சி தேர்வு எல்லாம் செய்து பரிசு கொடுக்கப்பட்டால் தானே அதற்கும் மதிப்பும் மவுசும் எல்லாம்.
இப்படி இருக்க, சினிமாவில் மிகப்பெரிய உயரிய கவுரவ விருது என பார்த்தால் அதுதான் "ஆஸ்கர் விருது". இந்த விருது பெற்றவரை உலகம் கொண்டாடும். குறிப்பாக இவர் ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் தெரியுமா..! இவர் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் தெரியுமா..! இந்த படம் ஆஸ்கர் விருது வென்ற படம் தெரியுமா என மக்கள் வியப்பனுடன் சொல்லும் அளவிற்கு மிக உயரிய உலக விருது இது.
இதையும் படிங்க: என்னை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம்.. நடிகை பவித்ரா லட்சுமி காட்டமான பதிவு..!
அவ்வளவு எளிதில் இந்த விருது யாருக்கும் கிடைத்து விடாது. காரணம் உலக அளவில் வழங்கப்படும் சினிமா விருதுகளில் மிகவும் முக்கியமான விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டி என்பது சர்வதேச அளவில் மிகவும் கவனமாக நடைபெறும். இந்த விருதுக்கான தேர்வை மிகுந்த பொறுப்புடன் தேர்வுக்குழுவினர் செயல்படுத்தி விருதுக்கான பெயரை வெளியிடுவர். அதனாலேயே இந்த விருதின் மீது மக்க்ளுக்கு நம்பிக்கை அதிகம்.
இப்படி பட்ட இந்த ஆஸ்கர் விருதை அமெரிக்காவில் உள்ள "அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்" நிறுவனத்தினர் தான் வழங்குகின்றனர். இந்த விருதை வெல்வது மிகவும் சவாலான விஷயம் என அனைவரும் சொல்ல காரணம், இந்தியா போன்ற நம் நாடுகளில் இருக்கும் அரசியல் சூழலில் ஆஸ்கர் விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவதற்கே பல கட்ட அரசியல்வாதிகளை கடந்து வர வேண்டி உள்ளது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கு சுமார் 300 படங்களில் இருந்து 350 படங்கள் வரை ஆஸ்கருக்கு விண்ணப்பிக்க படுகிறது.
ஆனால், இந்த படங்கள் அனைத்தும் ஆஸ்கர் குழுவில் இருக்கும் வாக்காளர்களால் பார்க்கப்படுவது கிடையாது என்ற குற்றச்சாட்டு சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை மறைமுகமாக சந்தித்து, அவர்களிடம் தங்களது படங்களுக்கு வாக்களிக்க கோரிக்கைகள் எல்லாம் வைக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது அமெரிக்க ஆஸ்கர் நிறுவனம். தொடர்ந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் , 'அகாடமி வாக்காளர்கள்' வாக்களிப்பதற்கு முன்பாக அவர்கள் பார்த்த அனைத்து படங்களையும் 'பார்த்துவிட்டோம்' என்பதை உறுதி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல், 'ஏஐ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களை எதிர்காலத்தில் வரவேற்கும் விதமாகவும் சில வழிகாட்டுதல்களை அகாடமி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்கவராகவும் படைப்பாளியாகவும் இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அகாடமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்படி இருக்க, 2025 - 2026க்கான ஆஸ்கர் விருதுகளில் தமிழ் படங்கள் எத்தனை இடம் பெரும் என்பதை குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி கன்னியாக மாறிய திஷா பதானி..! குறைவான ஆடை பெரிதான கிளாமர்..!