என்னை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம்.. நடிகை பவித்ரா லட்சுமி காட்டமான பதிவு..!
தொடர் வதந்திகளுக்கு அதட்டலான பதிவால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா.
பார்க்க சிரிப்பழகியாக இருக்கும் அழகான நடிகை தான் பவித்ரா லட்சுமி. இவர் பல குறும்படங்கள் வாயிலாக பல இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இதனை அடுத்து பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி புகழின் கிரஷாக பேசப்பட்டு பிரபலமானார். இவரது சிரிப்புக்கு அடிமையாகாத இளசுகளே தமிழகத்தில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது சிரிப்பு குழந்தை தனமான பேச்சு, குறும்புத்தனமான கோபம் அனைத்தும் மக்களை அதிகம் ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.
இப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பவித்ராவுக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாக ஓகே கண்மணி, நாய் சேகர், உல்லாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல படவாய்ப்புக்காக காத்து கொண்டுள்ளார். இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களாக பவித்ராவிற்கு அவரது ரசிகர்களே கும்பாபிஷேகம் செய்யும் அளவுக்கு ஒரு வதந்தி இணையத்தில் பரவி வருகிறது. அதற்கு பவித்ராவே விளக்கம் கொடுத்தாலும் அடங்கும் பாடில்லை.
இதையும் படிங்க: ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி கன்னியாக மாறிய திஷா பதானி..! குறைவான ஆடை பெரிதான கிளாமர்..!
அப்படி என்ன நடந்தது என பார்த்தால், சமீபத்தில் நடிகை பவித்ரா லட்சுமி முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாகவும், அதனால் அவருக்கு உடல் முழுவதும் அலர்ஜி வந்துள்ளதாகவும், இதனால் சிகிச்சைக்கு சென்ற அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் இணையதளத்தில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் சில நெட்டிசன்கள்.
இதனை பார்த்து பவித்ரா ரசிகர்கள் ஷாக் ஆனது ஒருபுறம் இருந்தாலும் பவித்ராவே ஷாக் ஆகி இருக்கிறார் என்றே சொல்லலாம். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த பவித்ரா, தயவு செய்து இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என பதிவிட்டு இருந்தார். ஆனால் அவர் பதிவை விட அவரை குறித்ததான வதந்தி வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து தன்னை பற்றி பரவும் வதந்திகளை கண்டு கடுப்பான பவித்ரா காட்டமான பதிவை தனது இன்ஸ்ட்டா பகுதியில் தற்பொழுது பதிவிட்டுள்ளார்.
அதில், எனது தோற்றம் மற்றும் எடை குறித்தும் என்னைப் பற்றி பேசவும் தற்பொழுது நிறைய ஊடகங்கள் கிளம்பியுள்ளன. கருத்துகள் மற்றும் கதைகள் மூலம் என் தரப்பிலிருந்து நிறைய தெளிவுபடுத்தப்பட்ட பிறகும், அவை நிறுத்தப்படுவதாகத் தெரியவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டேன், இதை செய்தேன், அதை செய்தேன் என இது போன்ற விஷயங்களைச் சொல்லி, ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது மிகவும் உணர்ச்சியற்றது.
சில கருத்துகள் மிகவும் உணர்ச்சியற்றவை மற்றும் இதயமற்றவையாக உள்ளது. அது என்னவென்று நான் குறிப்பிட விரும்பவில்லை. நான் மீண்டும் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், நான் கடுமையான உடல்நலப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன், அதற்கான சிகிச்சையில் இருக்கிறேன், நான் நல்ல கவனிப்புடன் இருக்கிறேன். உண்மையான அக்கறையுடனும் அன்புடனும் இதைக் கேட்ட அனைவருக்கும் நன்றி.
எனது பெயரையும் உங்கள் நல்லெண்ணத்தையும் இந்த இக்கட்டான சூழலில் பணயம் வைத்து தனிப்பட்ட உங்களின் பொழுதுபோக்கிற்காக என்னை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், எனக்கு ஒரு வாழ்க்கையும் எதிர்காலமும் உள்ளது, உங்கள் போலி பேச்சுக்களால் ஏற்கனவே இருப்பதை விட என்னை அதிகமாக கடினமாக்க வேண்டாம்.
மேலும் தயவு செய்து உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கோ செய்ததை நீங்கள் அனுமதிக்காத ஒன்றை மற்றவர்களுக்கு செய்யாதீர்கள்.. கொஞ்சம் மரியாதையும் அன்பும் தான் நான் உங்களிடம் கேட்டேன். இத்தனை நாள் நீங்கள் எனக்குக் கொடுத்தது அவ்வளவுதான், தயவு செய்து இப்போது அதை மாற்றாதீர்கள். கவலை வேண்டாம் கூடிய விரைவில் உங்கள் வீட்டு பெண் உங்களை தேடி ஆரோக்யத்துடன் திரும்பி வருவாள். என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பவித்ரா ஆதரவாளர்கள் தவறான தகவலை பரப்பி அதில் என்ன மகிழ்ச்சியை அனுபவித்து விடுவீர்கள். ஒருவரது மனவருத்தத்தில் குளிர்காய நினைப்பது தவறான செயல் என பவித்ராவுக்கு ஆதரவாக இணையத்தில் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கடற்கரையை கவர்ச்சியால் கொந்தளிக்க வைத்த மடோனா செபாஸ்டியன் - வைரல் போட்டோஸ்!