அஜித்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்..! ஒரே வீடியோவில் "AK" ரசிகர்களை பிரமிக்க வைத்த "SK"..!
ஒரே வீடியோவில் அஜித் ரசிகர்களை பிரமிக்க வைத்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில், கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்து முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான்.
ரூமில் படுக்க இடமில்லாமல், இரவு பகலாக தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், அது இது எது, விருது வழங்கும் விழா என அனைத்திலும் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய காமெடி திறமையாலும், நடிகர்களின் குரல்களை தன் வசப்படுத்தி, அதை தனக்குண்டான பாணியில் பேசி மக்கள் மனதில் தொகுப்பாளராக நீங்கா இடம் பிடித்தவர்.
இதையும் படிங்க: புதிய சிக்கலில் SK-வின் 'பராசக்தி'..! ஓடிடி நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையே இழுபறி..!
சின்னத்திரையில் நீண்ட நாட்கள் ஆக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான முகப்புத்தகம் என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார். அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என படிப்படியாக வெற்றி படங்களை கொடுத்து இன்று பராசக்தி, மதராஸி போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான "மதராஸி" திரைப்படத்திற்காக ஒரு கூட்டம் காத்திருக்க, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயன் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டுக்காகவும் ஒரு கூட்டம் காத்து கொண்டு உள்ளது.
இப்படி இருக்க, சிவா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் தளத்தில் விற்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை சுமார் ரூ.50 கோடிக்கு விற்க படக்குழுவினர் பேசி வருவதாகவும் அதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.45 கோடி வரை கொடுத்து படத்தை பெற்றுக்கொள்வதாக கூறிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் படக்குழுவினர் ரூ.50 கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதால் ஓடிடி வியாபாரம் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது. அநுமட்டுமல்லாமல் விஜயின் ஜனநாயகன் மற்றும் என்டிஆர் படங்களுடன் 2026ம் ஆண்டு பொங்கலில் நேரடியாக மோத தயாராகி உள்ளது "பராசக்தி" திரைப்படம்.
இப்படி படத்தில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வெளியே சுற்ற எங்கு நேரமிருக்கும் என மக்கள் நினைத்து கொண்டிருக்க, அதனை முறியடிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது . அதில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பர்களுடன் உடன் சேர்ந்து ரூமில் ஜாலியாக வைப் செய்து வருகிறார். மேலும் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான "வாலி" படம் நம் அனைவருக்கும் தெரியும். அப்படத்தில் வரும் ஹிட் பாடலான "ஓ சோனா" பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்களது பாராட்டையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனுக்கு ஜோடி இந்த ஹாலிவுட் நடிகையா..? வெறித்தனமாக களமிறக்கும் இயக்குனர் அட்லீ..!