புதிய சிக்கலில் SK-வின் 'பராசக்தி'..! ஓடிடி நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையே இழுபறி..!
ஓடிடி நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கு இடையே சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம்.
அன்று பராசக்தி ஹீரோ யாருன்னு கேட்டா சிவாஜின்னு சொல்லுவாங்க....ஆனா இப்ப பராசக்தி ஹீரோ யாருன்னு கேட்டா சிவகார்த்திகேயன்னு சொல்லுவாங்க என்று ரசிகர்கள் கூறிவரும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த பெயரை எங்கேயோ கேட்டதை போல் உள்ளதே என தோன்றுகிறதா.. ஆம், சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனிடம் "பராசக்தி ஹீரோடா" என சொல்லும் பொழுது உடனே அவர் "சிவாஜி" என்பார். அதே போல் தான் தற்பொழுது இந்த படமும் உருவாகி வருகிறது.
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா முதலானோர் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் தான் பராசக்தி. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கொங்கரா, அதற்கு கீழ் "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ.
சினிமாவைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது அதன் பயணம்தான். அந்த வகையில் உங்களோடு இணைந்து பயணித்து, பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது." என்று நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டு இருந்தார். இதில் சிவா-வின் கெட்டப்புகளை பார்த்த ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனுக்கு ஜோடி இந்த ஹாலிவுட் நடிகையா..? வெறித்தனமாக களமிறக்கும் இயக்குனர் அட்லீ..!
இப்படத்தில், மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பசில் ஜோசப் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவர். பல படங்களில் பிசியாக இருக்கும் இவர் சமீபகாலமாக இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இப்படி இருக்க, பராசக்தி படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருந்த வேளையில்,இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டவுன் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், சமீபத்தில் பராசக்தி படத்தின் போஸ்டரை பதிவு செய்து அதன்கீழ் "This Pongal" என குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதில் புதிய சிக்கல் என்ன வென்றால் பராசக்தி வெளியாகும் நாளில் விஜயின் ஜனநாயகன் படமும், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவாரா படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடுவோம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் தளத்தில் விற்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை சுமார் ரூ.50 கோடிக்கு விற்க படக்குழுவினர் பேசி வருவதாகவும் அதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.45 கோடி வரை கொடுத்து படத்தை பெற்றுக்கொள்வதாக கூறிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் ரூ.50 கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதால் ஓடிடி வியாபாரம் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் கூலி மற்றும் விஜயின் ஜனநாயகன் திரைப்படங்கள் ஓடிடியில் ரூ.100 கோடிகளுக்கு மேல் விற்பனையான நிலையில் பராசக்தி படமும் விற்க முன்வந்துள்ளது ஆச்சர்யத்தை அளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்தில் டூரிங் டாக்கீஸ் நடிகை..! படத்தில் நடித்ததை பெருமையாக பகிர்ந்து உற்சாகம்..!