×
 

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி இந்த ஹாலிவுட் நடிகையா..? வெறித்தனமாக களமிறக்கும் இயக்குனர் அட்லீ..!

அல்லு அர்ஜுன் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஹாலிவுட் ஹீரோயினை களமிறங்குகிறார் இயக்குனர் அட்லீ.

எந்த படமாக இருந்தாலும் சங்கரை போல பிரமாண்டமாக காண்பித்து அதனை தன் பாணியில் எடுத்து ஹிட் கொடுப்பவர் தான் அட்லீ, இவர் இயக்கிய எந்த படமும் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. பார்க்க கருப்பாக ஒல்லியாக இருக்கிறானே இவன் என்ன செய்வான் என்று சொன்னவர்களுக்கு 'சொல்வதை விட செயல்" முக்கியம் என்ற வார்த்தைக்கு இணங்க தனது படைப்பில் பதிலடி கொடுத்தவர் அட்லீ, இவர் என்ன செய்தாலும் அட்லீக்கு விமர்சனம் தான். 

தற்போது இவர் இயக்கிய பேபி ஜான் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், அப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர், அட்லீயை பார்த்து நீங்கள் ஹீரோக்களை பார்க்க செல்லும்போது உங்களை எங்கு தேடுவார்கள் என நக்கலாக கேட்டதற்கு, கூலாக என்னுடைய முதல் படைப்பை ஏ.ஆர் முருகதாஸிடம் கொடுக்க சென்ற போது அவர் என் உருவத்தை பார்க்கவில்லை என்னுடைய ஸ்கிரிப்டை தான் பார்த்தார் என கூறி நெத்தியடி பதிலை கொடுத்தார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்தில் டூரிங் டாக்கீஸ் நடிகை..! படத்தில் நடித்ததை பெருமையாக பகிர்ந்து உற்சாகம்..!

இப்படி இருக்க, இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று கொண்ட அட்லீ தயாரித்த, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், போன்ற படங்கள் அனைத்தும் ஹிட் படம் தான். இதனை தொடர்ந்து, இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம்  ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. 

இந்த சூழலில், தற்போது, அட்லீ இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். இந்த சூழலில், சமீபகாலமாக இப்படத்தை குறித்து அட்லீ சிவகார்த்திகேயனிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி படுத்தும் வகையில், இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகருக்கான முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் அட்லீ தெரிவித்திருந்தார். 

இதனை அடுத்து அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் கலக்கல் ஹீரோயின் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை பிரியங்கா சோப்ராவை அனைவருக்கும் தெரியும். சினிமாவில் தொடர்ந்து ஆறு வருடங்களாக நடிக்காமல் முற்றிலுமாக குடும்ப வாழ்க்கையை கையில் எடுத்த பிரியங்கா சோப்ரா. அமெரிக்காவில் தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் செட்டில் ஆகி மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். 

இவர் தற்பொழுது 'ராஜமௌலி' இயக்கத்தில் 'மகேஷ் பாபு' நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக பிரியங்கா ரூ.30 கோடி சம்பளமாக பெற்று இருக்கிறார். இந்த நிலையில், அட்லீயின் படத்திலும் தற்பொழுது இணைந்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு சம்பளமாக ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இதையும் படிங்க: அழகோ அழகு அவள் கண் அழகு...! பிரியங்கா மோகனின் அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share