சூடுபிடித்த ஆன்லைன் சூதாட்ட விவகாரம்....! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்...!
ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் பல பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்பொழுது பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரைபிரபலங்களையும் சமீபத்தில் திகிலடைய செய்த வழக்கு என்றால் அது தான் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்கான வழக்கு. ஆன்லைனில் சூதாட்டங்கள் பெருக பெருக அதில் பணம் இழந்து மறிப்பவர்களும் அதிகம் ஆகிவிட்டனர். இப்படி இருக்க தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ட்ரேடிங் மூலம் பணத்தை இழப்பதால் இவைகளை மூட வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படி இருக்க, ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் மக்களின் கோரிக்கைக்கு பலனாக ஆன்லைன் சூதாட்டத்தை பேன் செய்வார்கள் என்று பார்த்தால் அதனை விட்டு அதில் நடித்தவர்களை கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர். இதுவரை 25த்திற்கும் மேற்பட்ட பிரபலங்களை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..! ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..!
இந்த சூழலில், 32 வயதான 'ஃபனீந்திர சர்மா' என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் பிரபலங்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொடுத்தபுகாரில், தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், இன்ஃப்ளுயன்சர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறியதை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் இப்படியே போனால் அனைவரும் பணத்தை இழந்து இறந்து போனால் யார் பொறுப்பு? என கேட்டு புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, சிரி ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சௌந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவானி, நேஹா பதான், பாண்டு, பத்மாவதி, சாப்ரினி, பத்மாவதி, விஷ்ணு, நான் ஷியாமளா, டேஸ்டி தேஜா, மற்றும் பண்டாரு ஷேஷாயனி சுப்ரிதாம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மையாகவே நான் பெட்டிங் ஆப் விளம்பரத்தில் நடித்தேன், அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இதற்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். 2016ம் ஆண்டு இதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் நடித்தேன். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தான் என் தவறை உணர்ந்தேன், ஆனாலும் ஒப்பந்தம் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
9 வருடத்திற்கு முன்பு நான் தெரியாமல் செய்த தவறுக்காக நான் தற்போது உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தயவுசெய்து இளைஞர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என வீடியோவில் பேசி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது வழக்கு.. மோசடி வழக்கில் சிக்கி கதறல்...!