×
 

துணை முதல்வரையே கோபப்படுத்திய ராஷ்மிகா...புது பிரச்சனையா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டாமா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா பேசி இருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டாமா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா பேசி இருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைத்தது. ராஷ்மிகாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அண்மையில் ராஷ்மிகா, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா-2 திரைப்படம் பிரமாண்ட வெற்றிப்பெற்றது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மார்ச் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், பங்கேற்றார். கன்னட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர் என அனைவரும் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய டிகே சிவக்குமார், கன்னட திரையுலகினர் மீது தான் கோபமாக இருப்பதாகவும் சினிமா ஒரு சிலருக்கானது இல்லை என்றும், சினிமாவுக்கு அரசின் ஆதரவு முக்கியம் என்ற விதித்தில் கோபமாக பேசினார். 

இதையும் படிங்க: உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..!

துணை முதல்வரின் இந்த பேச்சுக்கு அம்மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான அசோகா, சினிமா நடிகர்கள் அடிமைகள் இல்லை. மாநிலத்தில் இயக்கம் தொடங்குவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என கூறியிருந்தார். அசோகாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அம்மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ரவி கனிகா, நடிகை ராஷ்மிகா மந்தனா தந்து சினிமா கெரியரை கன்னட படம் மூலம் தொடங்கினார்.

அவரை பெங்களூரு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைத்தால் மறுத்துவிட்டார். தன்னுடைய வீடு ஹைத்ரபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது என்றும் கூறியுள்ளார். 
ஒரு எம்.எல்.ஏ. 12 முறை ராஷ்மிகா வீட்டுக்கு சென்று அழைத்தும் அவர் வர மறுத்து விட்டார். கன்னட படத்தின் மூலம் வளர்ந்து விட்டு நம்மை புறக்கணித்தால் அவருக்கு பாடம் புகட்ட வேண்டாமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையும் படிங்க: விராட் கோலி பற்றி மாதவன் போட்ட இன்ஸ்டா போஸ்ட்... எச்சரித்த அனுஷ்கா சர்மா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share