பெரிய ஹீரோ கொடுத்த இரண்டு பரிசுகள்..! கண்கலங்க கூறி மகிழ்ந்த அமீர்கான்..!
மிகவும் பிரபல நடிகர் ஒருவர் கொடுத்த பரிசை இன்றும் பாதுகாத்து வருவதாக அமீர்கான் கூறியிருக்கிறார்.
1973ம் ஆண்டு "யாதோன் கி பாரத்" என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்கான். பின்னர் இவரது நண்பரும் இயக்குநருமான அசுதோஷ் கோவரிகருடன் இணைந்து 1984ம் ஆண்டு "ஹோலி" என்ற படத்தில்துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டில் "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் அமீர்கானுக்கு தேடி தந்தது. அடுத்ததாக "ராக்" படத்தில் சிறப்பாக நடித்து 'தேசிய திரைப்பட விருதை' பெற்றார். மிக குறுகிய கால நடிப்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிய பெருமை அமீர் கானையே சேரும்.
இதையும் படிங்க: சல்மானை டார்ச்சர் செய்யும் ராஷ்மிகா..! "சிக்கந்தர்" படத்தில் புதிய அவதாரம் எடுத்த நடிகை..!
அதன் பிறகு, 1990ம் ஆண்டு "தில்", 1991ம் ஆண்டு "தில் ஹை கே மந்தா நஹின்", 1992ம் ஆண்டு "ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்", 1993ம் ஆண்டு "ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே", அதே வருடம் மீண்டும் "பரம்பரா", 1994ம் ஆண்டு "அண்டாஸ் அப்னா அப்னா", 1995ம் ஆண்டு "பாஸி", அதே வருடம் மீண்டும் "ரங்கீலா" மற்றும் "டிராஜானி",1997ம் ஆண்டு "இஷ்க்",1998ம் ஆண்டு "எர்த்"மற்றும் "குலாம்",1999ம் ஆண்டு "சர்பரோஷ்",2001ம் ஆண்டு"தில் சஹ்தா ஹை", 2001ம் ஆண்டு "லகான்", 2005ம் ஆண்டு "மங்கள் பாண்டே", 2006ம் ஆண்டு "ஃபனா" மற்றும் "ரங் தே பசந்தி" மற்றும் தங்கல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
2007 ஆம் ஆண்டு, அமீர் கான் "தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தந்தது. இதனை தொடர்ந்து, லகான், தில் சாஹ்தா ஹை, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா போன்ற அவரது பல படங்கள் பாரம்பரியமிக்க படங்களாகக் கருதப்படுகின்றன.
இப்படி இருக்க, அமீர்கானின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமாக கருதப்படும் படம் என்றால் அதுதான் "கஜினி". இப்படத்தில் அமீர்கானின் நடிப்பை பார்த்து வியந்து போன சினிமா ரசிகர்கள் மற்றும் திரைவிமர்சகர்கள், அவரை பாராட்டி தள்ளினர். ஆனால் இந்த பாராட்டுகளை காட்டிலும் இப்படத்தின் வெற்றியில் அவர் நினைவு கூறும் முக்கிய நபர் ஒருவர் இருக்கிறார் எனபதை சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகர் அமீர்கான்.
அதில் "கஜினியின் வெற்றிக்கு பின்னர் ஒரு வெற்றி விழா நடத்தப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் சல்மான்கான் கலந்துகொண்டு அவர் தன் கைகளால் வரைந்த இரண்டு ஓவியங்களை எனக்குப் பரிசளித்தார். அவைகள் என் வீட்டில் உள்ளன' என்று பெருமிதத்துடன் கூறினார்.
இதையும் படிங்க: அவங்க பொண்ணுக்கூடயும் நடிப்பேன்... வயது வித்தியாச விவகாரத்தில் சல்மான் தடாலடி!!