வெளியான இரண்டே நாளில் ரூ.100 கோடியை கடந்த "சிக்கந்தர்"...! மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
சிக்கந்தர் திரைப்படம் வெளியான இரண்டே நாளில் பாக்ஸ் ஆபிசில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரம்ஜான் பண்டிகையன்று வெளியான திரைப்படம் தான் "சிக்கந்தர்". இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்த பொழுது சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து வருவதை குறித்து ராஷ்மிகா ஒரு பேட்டியில் "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்றால் அவர் சல்மான் கான் தான், அப்படிப்பட்டவருடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என கூறியிருந்தார். இந்த பதிவுகளை பார்த்து நம்பி, படம் பார்க்க முகத்தில் புன்னையுடன் சென்றவர்கள் திரும்பி வரும்பொழுது முகத்தை சோகமாக வைத்து கொண்டு வந்தனர்.
அந்த அளவிற்கு இயக்குனர் சங்கரின் 'இந்தியன் 2' படத்தை போல, சிறப்பான படத்தை முருகதாஸ் எடுத்துள்ளார் என ரசிகர்கள் கொதித்து போய் பேசிவருகின்றனர். இப்படத்தில் கதை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே கொஞ்சம் கூட பார்க்க நன்றாக இல்லை என கூறிவருகின்றனர்.
குறிப்பாக இப்படத்தில் சஞ்சய் எனும் கதாபாத்திரத்தில் ராஜா வீட்டுப்பிள்ளையாக நடித்திருக்கிறார் நடிகர் சல்மான் கான். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, ஆரம்பத்தில் இருந்தே தனது கணவருக்கு பாதுகாப்பாக இருக்க பல வேலைகளை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: சல்மானை டார்ச்சர் செய்யும் ராஷ்மிகா..! "சிக்கந்தர்" படத்தில் புதிய அவதாரம் எடுத்த நடிகை..!
இப்படத்தில் கஷ்டம் என்று வருபவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் கதாநாயகன், மக்களின் கஷ்டங்களை குறித்து மட்டுமே கவலைபட்டு இருப்பார். ஆனால் அவரது ஆசை மனைவிக்காக சிறிது நேரம் கூட ஒதுக்காமல் மக்கள் பாணியிலேயே ஈடுபட்டு வருவார். இந்த சூழலில் குண்டு வெடிப்பில் ராஷ்மிகா மந்தனா உயிரிழக்கிறார். அந்த சமயத்தில் அவரது கண், இதயம், நுரையீரல் என ஒவ்வொரு உறுப்புகளும் 3 நபருக்கு தானம் செய்யப்படுகிறது.
இதில் மும்பையில் மினிஸ்டராக இருக்கும் சத்யராஜின் மகன் சாவுக்கு சிக்கந்தர் சல்மான் கான் தான் காரணம் என்று நினைக்கும் சத்யராஜ், சல்மான் கானை பழிவாங்குவதற்கு, அவரது மனைவியின் உறுப்புகளை உடலில் பொருத்தி இருக்கும் மூன்று பேரை கொல்ல புறப்படுகிறார். அவர்களை சல்மான் கான் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
இப்படி படத்தை குறித்து பல பேர் பேசினாலும் படம் வெளியான இரண்டே நாட்களில் வசூலில் சாதனை படைத்து இருக்கிறது சிக்கந்தர். இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.54 கோடியே 72 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின், இரண்டாவது நாள் முடிவில் படத்தின் வசூல் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை மொத்தமாக 105 கோடியே 89 லட்சம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். குறிப்பாக, இந்தியாவில் மட்டும் ரூ.39 கோடியே 37 லட்சமும், வெளிநாடுகளில் ரூ.11 கோடியே 80 லட்சமும் வசூலித்துள்ளது சிக்கந்தர்.
சல்மான் கான் நடித்து இதுவரை வெளியான படங்களில் 17 படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தற்போது 18வது படமாக 'சிக்கந்தர்' படம் சல்மான் கான் வரிசையில் இணைந்துள்ளது.
இதையும் படிங்க: அவங்க பொண்ணுக்கூடயும் நடிப்பேன்... வயது வித்தியாச விவகாரத்தில் சல்மான் தடாலடி!!