×
 

"சித்தார்த் வீட்டில் சும்மாவே இருக்க மாட்டார்".. கணவரை புகழ்ந்து தள்ளிய அதிதி ராவ்..!

நடிகர் சித்தார்த் பற்றி யாரும் தெரியாத ரகசியங்களை உடைத்திருக்கிறார் நடிகை அதிதி ராவ்.

"ஏன்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு" என்ற பாடலை கேட்டால் அனைவரது எண்ணத்தில். தோன்றும் ஒரே நடிகர் சித்தார்த் மட்டுமே. இவர் பேச்சுகளும் பார்வைகளும் நடிப்புகளும் விதவிதமாக... ரகரகமாக... அற்புதமாக இருக்கும். அந்த வகையில், இவரது நடிப்பில் வெளியான "சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தில் சிறந்த காதலனாகவும், மச்சானுக்கு மாமனாகவும், சிறந்த போலீஸாகவும் நடித்து இருப்பார்.

இந்த நடிப்பு பலரையும் கவர வைத்தது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான "இந்தியன் 2" படத்தில் நடித்து இருப்பார். அப்படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் "தனது பெயரை கூறி சோஷியல் மீடியா சார்" என்று போலீஸிடம் பதில் கூறி பல மக்களின் ட்ரோலுக்கு ஆளாகி இருப்பார். 

இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் இதுவரை தோற்றதாக சரித்திரமே இல்லை . கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் கண்டிப்பாக ஓடிவிடும். அதே போல் நடிப்பில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பாடகராகவும், திரைக்கதை எழுத்தாளருமாகவும், சினிமா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இப்படி நடிப்பில் புலியாக திகழும் சித்தார்த்தின் உண்மையான பெயர் சூரியநாராயண். சென்னையில் பிறந்த நடிகர் சித்தார்த் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். பின்பு இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த முதல் படமான "பாய்ஸ்" திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..!

இதனை தொடர்ந்து, ஆய்த எழுத்து, நூற்றெண்பது, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச்4, தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், அரண்மனை 2, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை, நவரசா, சித்தா, டக்கர், இந்தியன் 2, மிஸ் யூ, லவ்வர், அயலான், சித்தார்த் 40 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கிரிக்கெட் திரைப்படமான "டெஸ்ட்" வரும் ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. 

இப்படத்தை குறித்து சமீபத்தில் பேசிய நடிகர் சித்தார்த், "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுது போக்காக இல்லாமல் வாழ்க்கையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் பெரும் வெற்றி நம் வெற்றியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் பெருகியுள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் அதில் ஒருவன் தான்.

நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன். ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்தவர்கள் என்று பார்த்தால் என்றும் 'ராகுல் டிராவிட்' தான், என கூறி இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படத்தை காண மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த சூழலில், நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், தற்போது அதிதி ராவ் தனியார் நிகழ்ச்சிக்கு கொடுத்த பேட்டியில், தனது கணவரான சித்தார்த் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். அதில், "அவரை திருமணம் செய்யலாமா..? என நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அந்த அளவிற்கு ஒரு நல்ல குணம்படைத்த மனிதர், அவரிடம் பொய்யான காரியங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. வெளியுலகில் அவர் எப்படி ஜாலியாக எதார்த்தமாக பேசுகிறாரோ அப்படித்தான் வீட்டிலும். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் நெருக்கமானவர்கள் என ஒருவரையும் விடாமல் எல்லோரையும் ஒன்றாக வீட்டிற்கு வர வைத்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். காரணம் நான் அப்படிதான் வளர்ந்தேன், அது எனக்கு நிஜமாகவே பிடிக்கும்.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தது ஒரு இக்கட்டான சூழலில் தான். என்னவெனில் " ஹீராமண்டி படத்திற்கு கிடைத்த பாராட்டுகளை பார்த்தபோது அடுத்து எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என என்னை உற்சாகப்படுத்தினார் சித்தார்த். ஆனால் அதன்பின் வாய்ப்பே வரவில்லை. எனக்கு வறட்சியில் இருப்பது போல இருந்தது. அந்த நேரத்தில் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து, திருமணத்தை செய்து கொண்டோம்.

அதன்பின் நிறைய படங்கள் வர நடிக்கலாம் என போய்விட்டேன். ஆனால் அவர் என்னை ஒருமுறை கூட நடிக்க வேண்டாம் என தடுத்ததில்லை" என கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: சும்மா.. கிரிக்கெட் வீரனாக நடிக்க முடியாது.. அதற்கும் பயிற்சி வேண்டும்..! டெஸ்ட் பட நடிகர் சித்தார்த் ஆவேசப் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share