ஓ... இது தான் விஷயமா..! சினிமாவில் இருந்து விலகிய ரகசியத்தை உடைத்தார் நடிகை ரம்பா..!
நடிகை ரம்பா சினிமாவில் இருந்து விலகிய காரணத்தை பொது வெளியில் கூறியிருக்கிறார்.
ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. ரம்பா நடித்த முதல் படம் 1992ம் ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான "சர்கம்" மற்றும் "சம்பகுளம் தச்சன்"படம். அடுத்து 1993ம் ஆண்டு ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான "ஆ ஒக்கடு அடக்கு" என்ற தெலுங்குப் படத்தில் அங்கு அறிமுகமானார்.
ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. ரம்பா நடித்த முதல் படம் 1992ம் ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான "சர்கம்" மற்றும் "சம்பகுளம் தச்சன்"படம். அடுத்து 1993ம் ஆண்டு ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான "ஆ ஒக்கடு அடக்கு" என்ற தெலுங்குப் படத்தில் அங்கு அறிமுகமானார்.
தமிழில், கதிர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது புகழையும் தேடித்தந்தது. இதற்கு பின்பாக தான் ரம்பாவுக்கு "தொடை அழகி" என ரசிகர்கள் பெயர் வைத்து அன்புடன் அழைத்தனர்.பின்னர் கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலான ரம்பா, மூன்று குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
இப்படி திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பக்கம் வராதவர் தற்பொழுது மீண்டும் சினிமா துறையில் தனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு முதல்படியாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகக் களமிறங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: சினிமாவை விட குடும்ப உறவுகள் தானே நிரந்தரம்..! மனம் விட்டு பேசிய நடிகை ரம்பா..!
இதுவரை நடிகை ரம்பா உழவன், உள்ளதை அள்ளித்தா, ஜானகிராமன், அருணாச்சலம், தர்ம சக்கரம், நினைத்தேன் வந்தாய், தேசிய கீதம், காதலா காதலா, என்றென்றும் காதல், மின்சார கண்ணா, உனக்காக எல்லாம் உனக்காக, சுயம்வரம், அழகான நாட்கள், சுக்ரன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் பல வருடங்களுக்கு பிறகு தற்பொழுது ரம்பா மீண்டும் சினிமாவில் காம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவரது படம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகினறனர்.
இப்படி இருக்க, இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்து தான் விலகி இருந்த காரணத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை ரம்பா, தனியார் சேனலுக்கு அவர் கொடுத்த நேர்காணலில், " நான் திருமணத்திற்கு பிறகு கனடாவிற்கு சென்று விட்டேன். அங்கு எனக்கு குழந்தைகள் பிறந்தவுடன், எனது கணவர் அதிகமாக பிஸ்னஸ் வேலையாக வெளியில் சென்று விடுவார்.
ஆதலால் என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருந்து நல்லது கேட்டதை சொல்லி கொடுத்து அவர்களுக்கு முழு அன்பையும், அவர்களுடன் இருந்து கொடுக்க நினைத்தேன்.
குழந்தைகளா..? சினிமாவா..? என யோசிக்கையில் எனக்கு குழந்தைகள் தான் பெரியதாக தெரிந்தார்கள். ஆதலால் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால், நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் இன்று வரை கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும், என்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமா தான்" என அவர் புன்னகையுடன் கூறியுள்ளார் ரம்பா.
இதையும் படிங்க: கோடை காலத்தில் குளு.. குளு.. காட்சிகள்..! வெயிலுக்கு இதமாக மனத்திற்கு குளிராக வருகிறது 7 படங்கள்..!