தக்லைஃப் பட ஹரோயின்கள் மேல் வருத்தப்பட்ட கமல்ஹாசன்..! மேடை பேச்சால் அதிர்ந்த மணிரத்தினம்..!
இயக்குனர் மணிரத்தினத்திற்கு பட்டப்பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், காதலா காதலா,
இதையும் படிங்க: என்னை போல் குறைபாடு உடையவர் தான் எனது கணவர்.. நடிகை அபிநயா ஓபன் டாக்..!
தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இப்படி இருக்க, பிரபல நடிகர் சிவராஜ்குமார், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் என்றும், அவரது தீவிர ரசிகனாக இருந்தபடியால் அவரை கட்டி பிடிக்க அனுமதிகேட்டு பிடித்தேன். அதற்காகவே நான் மூன்று நாட்கள் குளிக்கவில்லை என்றார். இப்படி இருக்க, நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நடிப்பெற்றது இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி போங்க பேசினார்.
அதில், " மணிரத்னத்துடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே
காரணம். உங்களுக்கு தெரியுமா மணிரத்னத்துக்கு நான் பட்டப்பெயர் வைத்துள்ளேன் அது என்னவெனில் 'அஞ்சரை மணிரத்னம்'. அதுக்கு என்ன காரணம் என்றால், படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கே வந்துவிடுவார்.
சிம்புவின் அப்பாவிற்கு என் மேல் பாசம் கொஞ்சம் அதிகம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் அழுது விடுவார். அவரை விட அவரது மகன் சிம்பு எப்படி என்றால் பாசத்தில் அப்படியே டி.ஆர் தான். அவர் 8 அடி பாய்ந்தால் அவரது மகன் 16 அடி பாய்ந்து உள்ளார். இந்த டயலாக் இந்த படத்திலும் இருக்கு. அவரைப் பார்த்து நான் சொல்ற ஒரே விஷயம் என்னவெனில், பொறாமையும் போட்டியும் நிறைந்த இந்த திரைத்துறையில் இப்படி ஒரு பாசமிகு நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
மேடையில் இருக்கிற இந்த இரண்டு கதாநாயகிகளும் இந்த படத்துல ஒரு முறை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லவில்லை. ஆனால் தினந்தோறும் காலை, மாலை எப்போது ஷூட்டிங்கிற்கு வந்தாலும் என்னை பார்த்து சார், ஐ லவ் யூ என சொன்ன ஒரே ஆள், ஜோ ஜோ தான். அதனால் மனசை கொஞ்சம் தேற்றிக்கொண்டேன் " என கலகலவென பேசினார்.
இதையும் படிங்க: தன்னை பற்றி அவதூறு பேசிய பிரபலம்..! பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலடி..!