×
 

பெற்ற தாய்க்கும் கட்டின மனைவிக்கும் பிரம்மாண்ட கோவில்..! ராகவா லாரன்ஸை ஃபாலோ செய்த மதுரை முத்து..! 

தன்னை ஈன்ற பெற்றோருக்காகவும் தன்னில் பாதியான மனைவிக்காகவும் கோவில் கட்டி இருக்கிறார் மதுரை முத்து 

அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக உலகத்திற்கு ஒளியாகவும் பலரது இல்லங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே நகைச்சுவை நாயகனாகவும் விளங்கியவர் ஸ்டாண்டப் காமெடியனான மதுரை முத்து. இவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு நகைச்சுவை வார்த்தைகளுக்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்பொழுது நடுவராகவும் வலம் வந்தவர், மீண்டும் தொலைக்காட்சிகளில் பிராபர்ட்டி காமெடி என்ற புதிய அவதாரத்தை எடுத்து மக்களை குஷிப்படுத்தி வருகிறார். 

இப்படி பிரபல தொலைக்காட்சியில் வலம் வரும் மதுரை முத்து, சிறப்பு பட்டிமன்றங்களில் கலந்து கொள்வது, திருமண நிகழ்ச்சிகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்வுகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து தன்னுடைய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இவரது உழைப்புக்கு பலனாக இன்று பள்ளி, கல்லூரிகளிலும், பொது நிகழ்வுகளிலும் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்து வருகின்றனர் பல தொழிலதிபர்கள்.

இதையும் படிங்க: சாவு பயத்தில் இளையராஜா... குடும்பத்தை நினைத்து கண்ணீர்!!

இப்படி இருக்க, சமீபத்தில் இவர் நடுவராக இருக்கும் நிகழ்ச்சியில் தனது அப்பா, அம்மா மற்றும் மனைவியை நினைத்து கண்ணீர் மல்க பேசிய காட்சிகள் அனைவரது நெஞ்சையும் உருக வைத்தது. மேலும் தனது தாயுக்காகவும் தகப்பனுக்காவும் மறைந்த தனது மனைவிக்காகவும் கோவில் ஒன்றை கட்டி வருவதாகவும் அதை என்றுமே இவர்கள் மூவரின் நினைவாக வைத்திருப்பேன் எனவும் கூறியிருக்கிறார்.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அந்த கோவிலை பார்க்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை இணையத்தின் வாயிலாக அனைத்து மக்களும் பார்க்கும் படி காணொளியாக பதிவிட்டு இருந்தார்.


அதில், தனது அப்பா, அம்மா மற்றும் மனைவிக்காக கட்டிக் கொண்டிருந்த கோவிலின் பணிகள் முடிவடைந்ததாக கூறியிருந்தார். மேலும், தனக்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது என்று பேச தொடங்கியவர், இந்த இடத்தில் ஏழு அல்லது எட்டு அறைகள் கட்டி, அதில் தன்னை போல் தாய் தகப்பனை இழந்த பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மட்டுமல்லாது கைவிடப்பட்ட முதியவர்களையும் அழைத்து வந்து தனது தகுதிக்கு ஏற்ப அவர்களை பராமரிக்க வேண்டும்.இதுவரை தன்னிடம் 3000 புத்தகங்களுக்கு மேல் இருப்பதாகவும் அதனை அவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக கொடுக்க வேண்டும் என நினைப்பதாக கூறியிருந்தார். 


இந்த நிலையில், தன்னுடைய தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு கோவில் கட்டி சிலைகள் அமைத்த மதுரை முத்து அதற்காக திறப்பு விழா நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெற்றோரை அவமதிப்பது, அவர்களுடைய பேச்சை கேட்காமல் இருப்பது, போதைகளுக்கு அடிமைப்பட்டு பெற்றோரை அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் இன்றைய கால இளைஞர்கள் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பெற்றோரை மதித்து வணங்குவது வாழ்வில் எவ்வளவு சிறப்புடையது என்பதை உணர்த்தும் வகையிலும் இன்று எனது பெற்றோருக்கு சிலை அமைத்து உள்ளேன்.

அதேபோல் எனது மனைவி சிலையையும் ஒன்றிணைத்து கோவிலாக்கி உள்ளேன், ஆதலால் அனைவரும் பெற்றோரை மதிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை... வைரலாகும் இளையராஜா பேட்டி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share