×
 

சாவு பயத்தில் இளையராஜா... குடும்பத்தை நினைத்து கண்ணீர்!!

இசைஞானி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற குக் கிராமத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். ஹார்மோனியம் மூலம் இசைக்க கத்துக் கொண்டார். பின்னர் 21வது வயதில் பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்கத்தல் மேற்கத்திய இசையை கற்ற இவவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.

அவரது இசையமைப்பில் கடைசியாக ஜமா, விடுதலை 2, தினசரி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அவற்றி தினசரி தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அவர் சமீபத்தில் தனது சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றினார். இந்தியாவிலிருந்து இளையராஜாதான் சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் ஆவார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்கள். இவரது சிம்பொனியால், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தது. இளையராஜாவுக்கு வரும் ஜூன் 2ஆம் தேதி, அதாவது அவரது பிறந்த நாளில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை... வைரலாகும் இளையராஜா பேட்டி!!

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், நான் தன்ராஜ் மாஸ்டரிடம், மாணவராக இருந்தேன். அப்போது மைசூரில் கச்சேரிக்காக சென்றேன். மைசூரில் நாங்கள் தங்கியிருந்த அறையில் நானும் எனது நண்பரும் இருந்தோம். கச்சேரி முடிந்த பின்னர், எனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், நான் அறையிலேயே தங்கிவிட்டேன். அறையை வெளியே பூட்டிவிட்டு, எனது நண்பர் வெளியே சென்றுவிட்டார். ஆனால் அறையை பூட்டிவிட்டு சென்றது எனக்கு தெரியாது. இப்படி இருக்கும்போது, எனக்கு காய்ச்சல் அதிகமாக தொடங்கியது. என்னால் அறையை விட்டு வெளியே போக முடியவில்லை.

அறையில் போன் இல்லாததால், ஹோட்டல் நிர்வாகத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரம் ஆக ஆக, காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அது வரை இந்த அளவிற்கு காய்ச்சல் எனக்கு வந்ததில்லை என்பதால், அவ்வளவு தான், நாம் உயிரோடு இருக்க மாட்டோம். இதுதான் நமது கடைசி நாள். உயிர் பிழைக்க வழியே இல்லை என நினைத்து, எனது அம்மா, மனைவி, குழந்தைகளை நினைத்து அழுதேன். உங்களை எல்லாம் விட்டுட்டு போகிறேனே என அழுதேன். பின்னர், வெளியே போன என் நண்பர், வந்து கதவைத் திறந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்தார்.  இவரது இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: புகைச்சலை கிளப்பிய இளையராஜா - லிடியன் விவகாரம்… ஃபுல் ஸ்டாப் வைத்த சிஷ்யன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share