×
 

பிரதீப் இயக்குநர் என்பதை அன்றே கணித்த ஆசிரியர்..! இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய பதிவு..!

பிரதீப் ரங்கநாதன் எழுதிய Exam பேப்பர் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதனை பார்த்தால் சிறிய பையன் போல் தான் இருக்கும். ஆனால் படம் எழுதுவதிலும் இயக்குவதிலும் நடிப்பிலும் கைதேர்ந்தவர். பிரதீப் இயக்கிய முதல் படமான கோமாளியில், மனித நேயத்தை மையாக வைத்து ஒரு கலக்கல் காமெடி திரைப்படமாக இயக்கி சிறந்த இயக்குநராக அறிமுகமானார். அதன் பின் காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை கூறும் "லவ் டுடே" படத்தை இயக்கியதோடு அதில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் படையையே உருவாக்கி இருக்கிறார். 

இதன் தொடர்ச்சியாக, கல்லூரி படிக்கும் பொழுது தனது சீனியர் "பார்க்க தான் ஒரு மாதிரி இருக்க ஆனா கேமராவில் பார்க்க நன்றாக இருக்க" என்று சொன்னதையே வீடியோவாக ரீகிரியேட் செய்து "ட்ரேகன்" படத்திற்கு ப்ரமோஷன் செய்தார். அதன்பின் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பிப்ரவரி 21ல் படம் வெளியாக இருப்பதால், அனைவரும் படத்தை காண ஆவலாக இருக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலரில் கல்லூரி வாழ்க்கையில் அரியர் வைத்த மாணாவனாக பிரதீப் இருப்பதை போல் காட்டப்படும், சமீபத்தில் இதனை பார்த்த பெண் ஒருவர், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்த படத்தை பார்த்து அரியர் வைத்தால் வாழ்க்கையில் உருப்புடமாட்டீங்க என வசைப்பாடி இருந்தது இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரபல நடிகையின் பாதங்களை பிடித்த ஜோதிகா...புகைப்படத்தை தேடி பார்க்கும் இணையவாசிகள்..!

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளத்தில் 2012ம் ஆண்டு பி.டெக் படிக்கும் பொழுது, தான் எழுதிய தேர்வுதாளின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார், அதில் பிரதீப் தேர்வுத்தாளை திருத்திய அவரது ஆசிரியர் "மை டியர்ஸ்ட் பிரதீப்.. தயவு செய்து கதை எழுதாதே " என குறிப்பிட்டு உள்ளார். இதனை பதிவு செய்துள்ள பிரதீப் கீழே "என் ஆசிரியர் என்னை கதை எழுத வேண்டாம் என்று சொன்னார், ஆனால் இப்போது அதையே எனது தொழிலாக மாற்றி உள்ளேன்" என குறிப்பிட்டு உள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் ட்ரேகன் படத்தை பற்றி பேசிய பெண்ணுக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலடி கொடுத்துள்ளதாக பேசி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: மீண்டும் வருகிறது சுந்தரா டிராவல்ஸ்.... படம் பார்த்துக்கொண்டே பஸ்ஸில் போக தயாரா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share