×
 

வீர தீர சூரனுக்காக விக்ரமின் நெகிழ்ச்சிப் பதிவு.. வாழ்றது ரொம்ப கஷ்டம் என புலம்பல்..!

ஒரே ஒரு வாழ்க்கை வரலாறா வாழ்ந்துடுனு சொல்றது சுலபம் ஆனா அப்படி வாழ்றது கஷ்டம் என்று வீடியோ வெளியிட்டு புலம்பி உள்ளார் நடிகர் சீயான் விக்ரம்.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிப்பு அசுரன் என்றால் அது விக்ரம் தான்... அவருடைய கலையுலக பயணத்தையே ஒரு திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு அவ்வளவு ஏற்ற இறக்கங்கள், திடீர் திருப்பங்கள் நிறைந்தது. 1990-ல் என் காதல் கண்மணி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான போதிலும், அடுத்து 10 ஆண்டுகள் கழித்தே சேது படம் மூலம் அவரால் தமிழ் திரையுலகில் கால் ஊன்ற முடிந்தது.

அதன்பின்னர் தில், தூள், ஜெமினி, அந்நியன் என்று ஒருபக்கம் கமர்ஷியல் வெற்றிகளகாகவும் மறுபக்கம் காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் என்று நடிப்புக்கு சவால்விடும் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்ற ஆதித்ய கரிகாலன் வேடம், தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. 

இதையும் படிங்க: வெளியானது வீர தீர சூரன் பட மேக்கிங் வீடியோ..! விக்ரமின் நடிப்பை கண்டு மக்கள் மகிழ்ச்சி..!

அந்த வரிசையில் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த வீரதீர சூரன் படம் அதன் இயக்குநராலும், உடன் நடித்த மற்ற நடிகர்களாலும் எப்போது ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளிவருதற்கு முதல்நாள் நீதிமன்றத்தில் கடன்விவகாரத்தில் முடக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி முதல் இரண்டு ஷோ தள்ளிப்போடப்பட்டு அன்று மாலைதான் படம் வெளியானது. பட வெளியீடு தள்ளிப்போனால் வெற்றி பெறாது என்று பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனால் அதனை மீறி வீர தீர சூரன் திரைப்படம் விக்ரம் ரசிகர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம். அதில் ஒரே ஒரு வாழ்க்கை வரலாறா வாழ்ந்துடுனு சொல்றது சுலபம் ஆனா அப்படி வாழ்றது கஷ்டம் என்று ஆரம்பித்து வீர தீர சூரன் பட வெளியீட்டின்போது நடந்த சட்ட சிக்கல்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். குடும்பம், குடும்பமாக தமிழக மக்கள் இந்த படத்தை பார்ப்பதும், அதுதொடர்பாக வீடியோக்களை பதிவு செய்து வெளியிடுவதும் கண்டு நெகிழ்ந்து போய் விட்டதாக அதில் விக்ரம் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்...! மாலையில் வெளியாகி வசூலை வாரி குவித்த "வீர தீர சூரன்"..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share