அட்லீ படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகை... சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் அட்லீ இயக்கும் படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற அவர், தி ஹீரோ என்ற முதல் பாலிவுட் படத்தில் நடித்தார். இதை அடுத்து லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை, அந்தாஸ் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். அந்தாஸ் படத்தின் மூலம் அவருக்கு பிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. பின்னர் அவர் வில்லியாக நடித்து வெளியான ஐத்ராஸ் படம் இவருக்கு பிலிம்பேரின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றுத்தந்தது.
இவ்வாறு இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆனதோடு வசூல் ரீதியிலும் சிறந்த படமாக அமைந்தது. பிரியங்கா சோப்ரா இதுவரை இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. இந்தியாவில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ரா திகழ்ந்து வருகிறார். ஹாலிவுட்டில் மேட்ரிக்ஸ் 4ம் பாகம் வரை நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா இதுவரை ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஹ்ரித்திக் ரோஷன், சன்னி தியோல், ஜான் ஆபிரகாம், அபிஷேக் பச்சன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சாவு பயத்தில் இளையராஜா... குடும்பத்தை நினைத்து கண்ணீர்!!
இதனிடையே தற்போது ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் SSMB 29 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் சென்ற அவர் மீண்டும் டோலிவுட்டுக்கு வர காரணம் என்ன என சினிமா வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. மற்றொரு தரப்பு அவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதனால் தான் அவர் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடிக்கப்போகும் படத்தை இயக்குநர் அட்லீ இயக்க உள்ளதாகவும் அதில் பிரியங்கா சோப்ரா தான் ஹீரோயின் எனவும் டோலிவுட்டில் கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவிலேயே அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஒருவேளை அல்லு அர்ஜுன் படத்தில் பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டால் அவருக்கு சம்பளம் மட்டுமே 30 முதல் 40 கோடி வரை வரும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இதையும் படிங்க: ஒரே வழக்கு.. 24 காட்சிகள் நீக்கம்..! ஒரு நொடியில் ஃபிளாப் ஆன எல்2எம்பூரான் திரைப்படம்..!