வெளிநாட்டில் அடியெடுத்து வைத்த "புஷ்பா 2"..! வெளிநாட்டு மொழியில் ரிலீசானது!
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டும் அல்லாது வெளிநாட்டு மொழியிலும் வெளியானது.
தமிழ் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது அல்லு அர்ஜூன் தான். இந்த நடிகரின் படத்தை பார்த்தால் உடலில் நாடி நரம்பு எல்லாம் புடைக்கும் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படி இருக்க செம்மரத்தை கடத்துவதை மையமாக வைத்து கூலியான ஹீரோ பெரிய கேங்ஸ்ட்டராக உருவெடுக்கும் மிகுந்த ஆக்ஷன் திரில்லர் படமாக, சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான திரைப்படம் 'புஷ்பா 2'.
கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான புஷ்பா முதல் பாகத்தில், கூலியாக இருக்கும் புஷ்பா, தன் தாயை அனைவரும் மதிக்க வைக்கவும், தன்னுடைய பிறப்பை நிலைநாட்டவும் பணக்காரனாக செம்மர கடத்தலில் ஈடுபட நினைத்து, போலீசிடம் இருந்து மரத்தை பாதுகாத்து சென்னைக்கு கடத்த கொண்டாரெட்டியுடன் இருந்து உதவி செய்து.பின் சென்னை முருகனை சந்தித்து பெரிய ஆர்ட்டர்களை எடுத்து சின்டிகேட்டுக்கே தலைவராக மாறுவார். இதில் இவருக்கு வில்லன் என்றால் சகாவத், போலீஸான சகாவத்தை புஷ்பா அவமானப்படுத்துவதால் பழிவாங்க துடித்து காத்திருப்பது போல் படம் முடிந்து இருக்கும்.
இதையும் படிங்க: புஷ்பா-னா ஃபிளவர் இல்ல.. வசூலில் கோடிகளை கடந்த ஃபயர்..!
பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 அனைவரது கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் கடத்தலுக்கு தடைகளை கொண்டு வரும் சகாவத்தை மீறி வெளிநாடுகளுக்கு செம்மரத்தை கடத்துவது. தனது மனைவி கேட்டதற்காக முதலமைச்சருடன் ஒரு போட்டோ எடுக்க புதிய முதலமைச்சரை கொண்டு வருவது. கடைசியில் தனது தங்கையை காப்பாற்ற அடிவாங்கி, தனது குடும்பத்துடன் இணைவது போன்று காண்பிக்கப்பட்டு இப்படம் முடிவடைந்திருக்கும். இப்படத்தில் இன்னும் ஜாலி ரெட்டி பழிவாங்க இருப்பதால் புஷ்பா பாகம் மூன்று வர உள்ளது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி நிறுவனத்தினர் போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்லாந்து என ஐந்து மொழிகளில் ஆங் சப் என்ற டைட்டில்களுடன் ஓடிடியில் தற்பொழுது புஷ்பா 2-வை வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த படம் இன்னும் அதிக அளவிலான ரசிகர்களை சென்றடைய வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரை ரூ.1871 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த "புஷ்பா" ஜாலி ரெட்டிக்கு கல்யாணம்..! சிக்குன பொண்ணு யார் தெரியுமா..!