சிவப்பு நிற பிகினி உடையில் மிதமிஞ்சிய அழகில் ராஷி கண்ணா - வைரலாகும் போட்டோஸ்!
நடிகை ராஷி கண்ணா கண்ணை பறிக்கும் அழகில் பிகினி உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'மெட்ராஸ் கஃபே' படம் மூலமாக பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இந்தப் படத்திற்கு பிறகு வரிசையாக தெலுங்கு படங்களில் நடித்தார்.
பின்னர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் பலர் நடித்த இமைக்கா நொடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: 47 வயதில் அப்பாவான ஜோரில் மனைவி - குழந்தையோடு போஸ் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி!
இந்தப் படம் கொடுத்த வரவேற்பிற்கு பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.
கடைசியாக ராஷி கண்ணா நடிப்பில் அகத்தியா படம் வெளியானது. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது ஒரு பாலிவுட் படம், ஒரு தெலுங்கு படம் என்று 2 படங்களில் நடித்து வருகிறார்.
வசீகரிக்கும் கொள்ளை அழகு, கவர்ச்சி ஆகியவற்றின் மூலமாக ரசிகர்களை கிறங்க வைத்து வரும் ராஷி கண்ணா இப்போது நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது அழகையும் காட்டி இளசுகள் மனதை இளக வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்லிம் லுக்... இடையை வில்லாக வலைத்து சைடு ஆங்குளில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!