ஸ்லிம் லுக்... இடையை வில்லாக வலைத்து சைடு ஆங்குளில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!
தற்போது கார்த்தி நடித்து வரும், சர்தார் 2 படத்தில் நடித்து வரும் ரஜிஷா விஜயன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் தான் நடிகை ரஜிஷா, கல்லூரில் காலத்தில் இருந்தே நடிப்பு மீது இருந்த ஈர்ப்பு காரணமாக மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை துவங்கினார்.
இதன் பின்னர், 2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அனுராகா கரிக்கின் வெல்லம்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: வந்துவிட்டது சர்தார்-2 படத்தின் டீசர்.. பட்டயக் கிளப்பும் கார்த்திக் - எஸ்.ஜே.சூர்யா காம்போ..!
முதல் படத்திலேயே தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ரஜிஷா, சிறந்த அறிமுக நடிகைக்கான கேரள அரசின் விருதை வென்றார்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கிய ரஜிஷாவின்... அளவான அழகும், பக்கத்துக்கு வீட்டு பெண் போல் இருக்கும் தோற்றமும், இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.
அந்த வகையில் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'கர்ணன்'. மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். கொடியன்குளம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
தாழ்த்தப்பட்ட மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அதை எதிர்த்து போராடும் ஒரு சாமானிய மனிதனை பற்றி இந்த படத்தை இயக்கி கவனிக்க வைத்தார் மாரி செல்வராஜ்.
முதல் படத்தில் கிராமத்து கிளியாக கலக்கிய ரஜிஷா, இரண்டாவது படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து ஜெய் பீம் படத்தில் நடித்திருந்தார். பின்னர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிபெற்ற போதிலும், தொடர்ந்து மலையாள படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு ரஜிஷா, பிரபல ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதுவரை ஹாம்லி உடையில் மட்டுமே ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த ரஜிஷா திடீர் என கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
உடல் எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ள ரஜிஷா... கருப்பு நிற உடையில்... சைடு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!