47 வயதில் அப்பாவான ஜோரில் மனைவி - குழந்தையோடு போஸ் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி!
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய வித்தியாசமான உடல் மொழி மற்றும் காமெடியால் மிகவும் பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. 45 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த இவர், கடந்த 2023 ஆம் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நிலையில், குறிப்பிட்ட உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்லிம் லுக்... இடையை வில்லாக வலைத்து சைடு ஆங்குளில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!
இது சங்கீதாவுக்கு இரண்டாவது திருமணம் என்றாலும், ரெடின் கிங்ஸ்லிக்கு முதல் திருமணமாகும். மேலும் சங்கீதாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், அந்த தகவலை சங்கீதா மறுத்தார்.
திருமணத்திற்கு பின்னரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வந்த சங்கீதா, கர்ப்பம் ஆன பின்னர் சீரியலில் இருந்து விலகினார். திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தினாலும் தன்னுடைய மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய அழகு பார்த்தார் ரெடின் கிங்ஸ்லி.
இவர்களுக்கு கடந்த மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்ததாக சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் குழந்தையை கையில் ஏந்தி இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானது. தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையோடு இருக்கும் இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரசிகர்களும் இவர்களுக்கு தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி... தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!