×
 

வேர்களை மறந்த ராஷ்மிகா... எம்.எல்.ஏ-வின் போக்கிரித்தனம்- முட்டுக்கொடுக்கும் சாதி..!

சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகள் கோடவா இனத்துக்கு மிரட்டல் விடுப்பதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் ராஷ்மிகாவை அவரது சமூகத்தின் காரணமாக மட்டுமே குறிவைக்கிறார்கள்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா “பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனாவுக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நேரமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு ராஷ்மிகா சார்ந்துள்ள கொடவா சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கொடவா தேசிய கவுன்சில் தலைவர் என்.யு. நாச்சப்பா, மத்திய அரசு, கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,''ரஷ்மிகா ஒரு சட்டமன்ற உறுப்பினரால் கொடுமைப் படுத்தப்பட்டு மிரட்டப்படுகிறார். இது  கோடவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிரான போக்கிரித்தனம்.

ராஷ்மிகா, அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். கடின உழைப்பு, திறமைக்கு அவரது வெற்றியைப் பாராட்ட வேண்டும். வற்புறுத்தல் இல்லாமல் தனிப்பட்ட தேர்வுகளைச் செய்ய அவருக்கு உரிமை உண்டு.ரஷ்மிகாவின் சொந்தத் தேர்வுகளைச் செய்யும் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தின் விருப்பங்களுக்கு இணங்கும்படி அவர் கட்டாயப்படுத்தப்படக்கூடாது. சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகள் கோடவா இனத்துக்கு மிரட்டல் விடுப்பதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் ராஷ்மிகாவை அவரது சமூகத்தின் காரணமாக மட்டுமே குறிவைக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகாவை தாக்க முற்பட்ட கர்நாடக MLA.. ஒரே ஒரு கடிதத்தில் சோலியை முடித்த ராஷ்மிகா குரூப்..விழுந்த அடி அப்படி..!

எம்.எல்.ஏவின் நடவடிக்கைகள் மக்களைத் துன்புறுத்துவதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு கடமைக்கு முரணானது.காவிரி நதியை பெரிதும் நம்பியுள்ள மண்டியா மக்கள், அன்னை காவிரியின் அன்பு மகளும், அந்தப் பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகையுமான ரஷ்மிகா மந்தனாவை கொடுமைப்படுத்தும் ஒரு எம்.எல்.ஏ இருப்பது முரண்பாடாக உள்ளது" என்று நாச்சப்பா கூறினார். 

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ரஷ்மிகா, ஹைதராபாத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதற்காக "பாடம் கற்பிக்கப்பட வேண்டும்" என்று மண்டியா எம்.எல்.ஏ கனிகா சமீபத்தில் கூறினார்.

"ரஷ்மிகா மந்தனா தனது வாழ்க்கையை கர்நாடகாவில் 'கிரிக் பார்ட்டி' (2016) என்ற கன்னடப் படத்தில் இருந்துதான் தொடங்கினார். கடைசியாக அவர் ஒரு திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டபோது, ​​அவர் ஹைதராபாத்தில் வசிப்பதாகக் கூறினார்" என்று கனிகா செய்தியாளர்களிடம் கூறினார்.
கர்நாடகா எங்கே இருக்கிறது என்று தனக்குத் தெரியாது என்று நடிகை கூறியதாகவும், நேரமின்மையை காரணம் காட்டி விழாவிற்கு அழைப்பை நிராகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"எங்கள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று பலமுறை அழைத்தார். ஆனால் கன்னட மண்ணில் வளர்ந்த போதிலும் கன்னடத்தைப் பற்றி அவர் கடுமையாகப் பேசினார். அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டாமா?" என்று அவர் கூறினார்.

நான் அவருக்கு ஒரு பாடம் புகட்டுவேன் என்று கூறியபோது, நான் வாழ்க்கை பாடங்களைப் பற்றி சொன்னேன்.ஆனால், நான் அவரைத் தாக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்தவில்லை. நீங்கள் ஏறிய ஏணியை உதைக்க வேண்டாம் என்று சொன்னேன்.

நடிகை தன்னை வளர்த்த மாநிலத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காகவே தனது கருத்துக்கள் கூறப்பட்டது. ராஷ்மிகா மந்தனா எங்கள் மாநில நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டபோது வரவில்லை. நீங்கள் மாநில உணவை சாப்பிட்டு வளர்ந்தீர்கள். எனவே அதற்காக நில்லுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். எங்களது நோக்கம் ராஷ்மிகாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அல்ல'' என்று அவர் தெளிவுபடுத்தினார்.
 

இதையும் படிங்க: துணை முதல்வரையே கோபப்படுத்திய ராஷ்மிகா...புது பிரச்சனையா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share