×
 

அவர் செஞ்ச புண்ணியம்கூட அவரை காப்பாத்தலையே? பயில்வான் ரங்கநாதன் வேதனை!!

மனோஜ் பாரதியின் மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ்-க்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது சேத்துபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மனோஜ் பாரதியின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் மனோஜ் பாரதியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரின் மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மனோஜ் பாரதியின் மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து 20 வருடம் வாழ்பவர்களையெல்லாம் எனக்கு தெரியும். ஆனால், 10 நாளில் மறுபடியும் வலிக்குது என்று நெஞ்சை பிடித்தபடி இறந்தது வேதனையாக உள்ளது. ஹீரோவாக முன்னுக்கு வரமுடியாவிட்டாலும், தன்னுடைய திறமைகளை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் மனோஜ் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், லைம்லைட் மனோஜ் மீது போதுமான அளவுக்கு விழவில்லை. ஏற்கனவே ரஜினிகாந்த் போன்றோரெல்லாம் மலேசியா சென்றுதான், ஆபரேஷன் செய்து கொண்டார்கள்.

இதையும் படிங்க: ரஜினிக்கே டூப்… வீட்டிலேயே மயங்கி கிடந்த மனோஜ்... நெஞ்சைப் பிடித்து சரிந்த சோகம்..!

மனோஜ்ஜின் தங்கை கணவரும் மலேசியாவில்தான் டாக்டராக உள்ளார். ஆனால், ஏன் மனோஜ் மலேசியா செல்லாமல், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்? இதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் சந்தேகமாக உள்ளது. அதேபோல, மனோஜ் மனதிற்குள் சில வருத்தங்கள் இருந்ததாகவும் தகவல்கள் பல பரவுகின்றன. அதாவது, அப்பா வருமானத்தில் வாழாமல், தன்னுடைய 100 சதவீதம் சொந்த உழைப்பில், குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் மனோஜ்ஜூக்கு இருந்ததாம். அதேபோல, அப்பா - மகன் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்தது என்கிறார்கள். மனோஜ் சொந்தமாக படம் எடுக்க வேண்டுமானால், அதற்கு சில கோடிகள் தேவை.

இது மனோஜூக்கு கிடைத்ததா தெரியவில்லை. உனக்கு மகனாக பிறந்ததுதான் பிரச்சனையே என்று விரக்தியில் அப்பாவை சொன்னாராம். இப்படியெல்லாம் பல விஷயங்கள் பரவி வருகின்றன. இதற்கு நடுவில்தான் மனோஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை குறித்து ரஜினியிடமும் ஆலோசனை கேட்டதற்கு மலேசியா செல்லும்படிதான் அவரும் சொல்லி உள்ளார். ஆனால், செல்லவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக மனோஜ் விலகியிருந்தாரா? அதுவும் தெரியவில்லை. மலேசியாவுக்கு சமீபத்தில் தன்னுடைய மகளிடம் பாரதிராஜா சென்றிருந்தார். டாக்டர் மருமகன் உபசரிப்பில், சற்று தெம்பாகி திரும்பி வந்திருந்தார். ஆனால், மச்சானிடம் சிகிச்சை பெற மனோஜ் ஏன் செல்லவில்லை என தெரியவில்லை.

நேற்று மாலை வீட்டுக்கு வந்துள்ளார் மனோஜ். இயல்பாகவே இருந்திருக்கிறார். வலி உயிர் போகுதே என்று தாங்க முடியாமல் கத்தியிருக்கிறார். சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு கொண்டு போவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. ஆனால், எதனால் வலி ஏற்பட்டது என்று தெரியவில்லை. சுகர் அதிகமாகிவிட்டதா? கல்லீரல் பாதிப்பு எப்படி இருந்தது? என்பதெல்லாம் மருத்துவ ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும். மனோஜ் குறித்து அவர் வீட்டு வேலையாட்கள் புகழ்ந்து பேசுகிறார்கள், ஐயா இப்போதெல்லாம் சரியா சாப்பிடறது இல்லை. எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எல்லாம் வருவார். கொரோன நேரத்தில்கூட வேலை இல்லாதபோதும் எங்களுக்கு சம்பளம் தந்தார். அன்பாக பேசுவார் என்கிறார்கள். வேலைக்காரர்களுக்கு செய்த புண்ணியம்கூட மனோஜை காப்பாற்றவில்லையே? பாரதிராஜாவுக்கு நேர்ந்துள்ள சோகம் வேறு யாருக்குமே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேட்டப்ப உதவாமா இப்ப வந்து அழுவரதுல அர்த்தம் இல்ல... மூத்த பத்திரிகையாளர் காட்டம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share