×
 

தனது பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்..! கன்னத்தில் முத்தம் கொடுத்து பாச மழை..!

உடல் நலம் பாதித்த தனது பாட்டியை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி இருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.

நடிகர் சிவராஜ்குமாரை கன்னட திரையுலகம் பல முகங்களில் பார்த்து இருந்தாலும், அவரை கேங்ஸ்டராக ஒரே நடையில் உலகம் முழுவதும் பார்த்து ரசிக்க வைத்தது நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் திரைப்படம் தான். உதவிக்காக சிவராஜ்குமாரை சந்திக்க செல்லும் ஜெயிலருக்கு வெல் ட்ரைண்டு ஸ்னைப்பர்ஸை கொடுத்து மிகவும் உதவி செய்வார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயிலரின் மருமகளையும் மனைவியையும் பாதுகாக்க சண்டையே இல்லாமல் அமைதியாக வந்து நின்று பார்வையால் மிரட்டுவார். 

இப்படிப்பட்ட பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை போல் தற்போது வரை 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி பட்டவரை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை நெல்சனையே சேரும். 

இதையும் படிங்க: வாழ்நாளில் இனி அரசியல் பக்கம் தலை வைக்கமாட்டேன்... தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உறுதிப்பட முடிவு.!

இப்படி சென்னையில் பிறந்து கர்நாடகாவில் குடியேறி தற்பொழுது அந்த மாநிலத்தின் சினிமா சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் சிவராஜ்குமார். இப்படி கெத்தாக இருப்பவர் அவரது சகோதரனின் மறைவுக்கு பின் துவண்டு போய் இருக்கிறார். இவரது சகோதரனான புனித் சிவராஜ்குமார் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி இருக்கிறார். உடனே அவரை விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அன்று கர்நாடகாவே ஸ்தம்பித்தது. 

இதனை அடுத்து, மறைந்து போன தனது தம்பியின் நினைவால் சரியாக தன்னை கவனித்து கொள்ளாத சிவராஜ்குமாருக்கு கேன்சர் இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல அவர் அமெரிக்காவிற்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்த பித்தப்பையை அகற்றி, தற்பொழுது தனது வாழ்க்கையையும், இழந்த சந்தோஷங்களையும், கோவில்களிலும் உறவுகளிடமும் ரசிகர்களிடமும் தேடி வருகிறார். இந்த சூழலில் உடல்நலம் பாதித்த தனது பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சிவராஜ்குமார், ஈரோட்டிற்கு சென்று அவரது பாட்டியை பார்த்து இருக்கிறார். அவரை பார்த்த அவரது பாட்டி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுது தனது பேரனை ஆசையாக கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார். 

இந்த புகைப்படங்கள் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: க்ளாடியேட்டர்-2... யாருங்க அந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்... ஜுனூன் தமிழில் மொழிமாற்றம் செய்து சொதப்பல்.....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share