ரகசியமாக திருமணம் செய்த பிரியங்கா தேஷ் பாண்டே..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு ரகசிய திருமணம் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. பார்க்க அழகாகவும் கொழு கொழு கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன் கையில் வைத்து அசத்தி வருகிறார்.
இப்படி இருக்க, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனி ஒரு ஆளாக நின்று நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்வதில் வல்லவர். ஆனால் இவரது திறமையை மற்றொருவருடன் சேர்த்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த நிகழ்ச்சி இயக்குனர், அவருடன் மாகாபா ஆனந்தை சேர்த்து எல்லா நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்க விட, ஷோக்கள் ஹிட் ஆனது. இன்று இவர்கள் இருவரது புகழ், பல பிரபலங்கள் மத்தியில் கொடிகட்டி பறந்து வருகின்றது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2-ல் சிவராஜ்குமார்..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!
இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி போர் அடித்துப் போன பிரியங்கா.. அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். ஆனால் அவர் களம் இறங்கிய பின்பு போட்டியில் விறுவிறுப்பு ஒரு பக்கம் அதிகரிக்க மறுபக்கம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான மணிமேகலைக்கும் அவருக்கும் இடையே யார் மிகப்பெரிய தொகுப்பாளினி என்ற சண்டை ஆரம்பித்தது.
ஒவ்வொரு முறையும் மணிமேகலை விட்டுக் கொடுத்து செல்ல ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மணிமேகலை பிரியங்காவிற்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரியங்காவின் மொத்த இமேஜையும் காலி செய்தார். தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் பல பேருடைய வாழ்க்கையே பிரியங்கா அழித்து வருவதாகவும் அவர் கூற, அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
பின் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அளவிற்கு பிரியங்காவின் பெயர் செய்திகளிலும் இணையதளங்களிலும் ட்ரெண்ட் ஆனது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவிற்கு ஆதரவாக பல நட்சத்திரங்கள் தங்களது பதிவுகளை இணையதளத்தில் பதிவிட்டு வந்தனர். பின்பு இந்த பிரச்சனை இருக்கும் இடம் தெரியாதபடி மறைந்து போக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா தான் ஜெயித்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் பெரும்பாலும் எந்த ரசிகர்களுக்கும் விருப்பமில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா ஏற்கனவே பிரவீன் என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இணையதளங்களில் இருந்து சற்று விலகி இருக்கும் பிரியங்கா ரகசியமாக திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் பிஸ்னஸ் மேன் என்று சொல்லக்கூடிய வசி என்பவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் இது குறித்து பிரியங்கா எந்தவித தகவலையும் அறிவிக்காத நிலையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்து உள்ளது.
கூடிய விரைவில் தனது திருமணத்திற்கான அறிவிப்பை பிரியங்கா தேஷ் பாண்டே வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விளக்கு பிடித்ததை பார்த்தியா... தவறாக பேசக்கூடாது...! சத்யராஜ் மகளுக்கு வார்னிங் கொடுத்த மதுவந்தி..!