×
 

அந்தரங்க வீடியோ... சீரியல் நடிகையை சீரழித்தது யார்..? போட்டோவை பகிர்ந்த ஸ்ருதி நாராயணன்..!

ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு தன்னை பற்றி பரவும் வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் இரு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள்.

சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் லீக்கான அந்தரங்க வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் என பல்வேறு சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பரவி வந்தது.

இந்த வீடியோவை யாரேனும் திட்டமிட்டு பரப்பி விட்டார்களா? என்கிற கேள்வியும் எழுந்தது. இந்த வீடியோ லீக்கான பிறகு ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட் அக்கவுண்டாக மாற்றி இருந்தார். இதனால், ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இன்று தனது இன்ஸ்ட்ராகிராமை பப்ளிக் பக்கமாக மாற்றி இருக்கிறார்.

அதில், தான் புடவையில் நடத்திய போட்டோ ஷூட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அத்தோடு ஸ்டோரியில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு தன்னை பற்றி பரவும் வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் இரு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: குற்ற உணர்ச்சியோட என்னால நடிக்க முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா விலகல்?

அதில் ஒரு உருவம் ஏஐ மற்றொரு உருவம் ரியல். சரியானதை கண்டுபிடியுங்கள். இதில் உண்மையானவர் யார்? சித்தரிக்கப்பட்ட பெண்மணி யார்? என அதில் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் தன்னைப் பற்றிய வீடியோ ஏஐ மூலம் மார்ப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருக்கிறார் ஸ்ருதி நாராயணன்.

ஆனால், இதனை நம்ப மறுக்கும் ரசிகர்கள், இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிட்டால் சதிகாரர்களுக்கு சாதகமாக அமையும். வேறு எங்குமே இல்லாத அளவுக்கு இன் செக்யூரிட்டி நிலவும் துறை சினிமா, டிவி மற்றும் மாடலிங் துறை. வெளியே தன்னம்பிக்கையாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளே பூஞ்சையாக, எளிதில் உடைந்து விடக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்தத்துறை அப்படி மாற்றி விடும். ரஜினி மற்றும் கமலுக்கே இன்னும் இன் செக்யூரிட்டி இருக்கிறதென்றால் மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம்?

அதே போல இந்தத்துறைகளில் இப்போது நடந்துகொண்டிருப்பது தொழிலோ , வியாபாரமோ அல்ல. கேம்ப்ளிங் என்று கூட சொல்ல முடியாது. அதையெல்லாம் தாண்டி எந்த லாஜிக்கும் இல்லாமல் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத யார் யாரோ இன்வால்வ் ஆகியிருக்கிறார்கள். கற்பனையே செய்ய முடியாத பெரும் பணம் புழங்குகிறது. ஒரு இருட்டு அறையில் 20-30 பேர் அமர்ந்துகொண்டு சிவக்கணத்தில் இருப்பதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம்.

இதையெல்லாம் தாண்டி , எக்ஸ்க்ளூஸிவ் போர்னோகிராஃபி, ஹை ப்ரொஃபைல் ப்ராஸ்டிட்டியூஷன் , பொலிட்டிக்கல் லாபி, இன்னும் இன்னும் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் நடக்கக்கூடும். பொது சமூகத்திடம் இருக்கும் பணத்துக்கு சம்மந்தமே இல்லாத அளவுக்கு பெரும் பணம் கொட்டினால், அதை வைத்திருப்பவர்களுக்கு ஹேண்டில் செய்வது சிரமம். அப்படி திடீரென சிலரிடம் பெரும் பணம் கொட்டினால் கற்பனைக்கு எட்டாத புதுப்புது பழக்கங்கள், புதுப்புது க்ரைம்கள் உருவாகும்.

இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, இதை ஒரு ஸ்கேண்டல் போலவோ, போர்னோ கிராஃபி போலவோ அலட்சியப்படுத்தி விட்டுக் கடக்காமல், தானாகவே வழக்கு பதிவு செய்து, உரிய சைக்யாட்ரிஸ்ட் உதவியுடன் நிதானமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் வேறு ஏதோ ஆழமான விசித்திரமான பிரச்சனை இருக்கிறது'' என அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளித்திரையில் "சிறகடிக்க ஆசை"... நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் ஆஃபர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share