×
 

துப்பாக்கியை நெற்றியில் வைத்த சாமுண்டீஸ்வரி.. திருமணத்திற்கு ஓகே சொன்ன ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட் !

ZEE தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.

நேற்றைய தினம்,  சாமுண்டீஸ்வரி ட்ரைவர் ராஜா தான் மாப்பிள்ளை என அறிவிக்க ரேவதி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது ரேவதி ராஜாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுக்கிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் பேசி சம்மதிக்க முயற்சி செய்கிறாள். 

அதே போல் மறுபக்கம் ராஜராஜன், பரமேஸ்வரி பாட்டி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் கார்த்தியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் கார்த்தி இது சரியாக வராது என்று சொல்கிறான். பாட்டி எல்லாம் சரியாக வரும். 

உனக்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடந்துட்டா சாமுண்டீஸ்வரி நம்ம குடும்பத்தை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என்று சொல்கிறார். அடுத்தாக ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து சென்று இரண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்க்க இந்த கல்யாணம் நடக்கணும் என பேச்சு வாரத்தை நடத்துகிறார். 

இதையும் படிங்க: கடத்தப்பட்ட மகேஷ்.. கார்த்திக் மீது பழி போடும் ரேவதி!கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

இங்கே சாமுண்டீஸ்வரி ரேவதி திருமணத்திற்கு சம்மதம் சொல்லாததால் துப்பாக்கியை எடுத்து நீட்ட ரேவதி என்ன கொன்னுடுவீங்களா? சுடுங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி உன்னை சுட மாட்டேன். என்னையே சுட்டுக்குவேன் என்று தன்னுடைய நெற்றியில் துப்பாக்கியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். 

ரேவதி இதெல்லாம் ரொம்ப தப்பு என்று சொல்கிறாள். ஆனாலும் சாமுண்டீஸ்வரி உறுதியாக இருக்க ரேவதி வேறு வழியின்றி திருமணத்திற்கு ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share