இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் யூஜிசி நெட் (Union Grand Commision - National Eligibility Test) எனும் தேர்வுகளை எழுத வேண்டும். இதனை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) அமைப்பு நடத்துகிறது. ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.

பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமல்லாது, இளநிலை ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவித்தொகை பெறுவதாக இருந்தாலும், பி.எச்.டி படிப்புக்கான தகுதித் தேர்வுகாவும் இந்த நெட் தேர்வுகள் அமைந்துள்ளன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் ஜனவரி 3-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போலீஸ் தேர்வில் 'காப்பி' அடித்தவர் சிக்கினார்: காதுக்குள் சிறிய 'ப்ளூடூத்' சொருகி, 'சினிமா பாணி'யில் நூதன மோசடி..
ஆனால் தமிழ்நாடு உட்பட பல தென்மாநிலங்களில் பொங்கல் என்றும் சங்கராந்தி என்றும் உழவர் பண்டிகை ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுவது வழக்கம். எனவே பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த தேதிகளில் நடைபெற உள்ள நெட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இன்றைய தினம் அதாவது ஜனவரி 15-ந் தேதி நடைபெற இருந்த தேர்வினை மட்டும் ஒத்தி வைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதேசமயம் 16-ந் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக கூறியது. அதன்படி இன்று நடைபெற இருந்த தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பாடங்களுக்கான தேர்வுகள் இன்றைய தேதியில் நடப்பதாக இருந்தது. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 21 மற்றும் 27 ஆகிய இரண்டு தேதிகளில் நடத்தப்படும். எனவே தேர்வெழுதும் மாணவர்கள் இந்த தேதிகளை கவனத்தில் கொண்டு பரிட்சை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ‘டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்’: ஐஐடி ரூர்கே மின்அஞ்சலைப் பார்த்து ‘ஷாக்’ ஆகிய கேட் விண்ணப்பதாரர்..