டெல்லியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இன்று வித்தியாசமான ஒரு போராட்டத்தை பாஜகவினர் நடத்தினார்கள்.
அதாவது வழக்கத்துக்கு மாறாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவாலின் முழு உருவ கட்அவுட்டை யமுனை ஆற்றில் அவர்கள் பலமுறை மூழ்கடித்தனர்.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக தலைநகர் டெல்லி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை டெல்லியில் ஓடும் யமுனை ஆறு முக்கிய பிரச்சாரக் களமாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: 382 கோடி டெல்லி சுகாதார ஊழலில், கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி பதிலடி
கெஜ்ரிவால் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று தாக்குதல் தொடுத்த பாஜக, இன்று காலைஇந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது

கெஜ்ரிவால் போட்டியிடும்புதுடெல்லி பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, படகு ஒன்றில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளுயர கட்-அவுட்டுடன் யமுனை நதியில் பயணம் செய்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இருந்தனர்.
அப்போது பாஜக வேட்பாளர், கெஜ்ரிவாலின் உருவப் படத்தை ஊடகங்களின் முன்னிலையில் யமுனையில் பல முறை மூழ்கடித்தார்.
கெஜ்ரிவாலின் கட்-அவுட் தனது இரு கரங்களை காதுகளில் தோப்புக் கரணம் போடுவது போல வைத்துக் கொண்டு இருப்பது போல் அந்த கட்டவுட் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதன் தலைக்கு மேல் இருந்த பலூன் அமைப்பில் கெஜ்ரிவால் பேசுவது போல ‘நான் தோல்வியடைந்து விட்டேன், 2025-க்குள் யமுனையை தூய்மைப் படுத்த தவறி விட்டேன். எனக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அதன்பின்பு பேசிய வர்மா, "யமுனை நதியை நாம் முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். அதைத் தூய்மைப்படுத்துவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. இயந்திரங்களைக் கொண்டு அனைத்து வண்டல் மண்ணையும் வெளியே எடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட வேண்டும். நமது பிரதமர் மோடி, சபர்மதி நதியில் செய்தது போல, நாம் யமுனை நதியில் செய்ய முடியும். அதற்கு 11 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம்" என்று தெரிவித்தார்.
டெல்லி மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கி வரும் யமுனை நதி மாசு இந்தப் பேரவைத் தேர்தலின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் யமுனையைச் தூய்மையாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற ஆம் ஆத்மி தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்