இன்று காலை பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் தமிழத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிப்பெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிப்பெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்
- தமிழ்நாட்டில் 2,359 கிராமங்களில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்
- முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6,100 கிமீ நீளத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கீடு
- ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ.22 கோடியில் நிதி ஒதுக்கீடு
- ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், வரும் நிதியாண்டில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி ஒதுக்கீடு
- சீரமைக்க முடியாத வீடுகளுக்கு பதிலாக புதிதாக 25,000 வீடுகள் கட்டித்தர ரூ.600 கோடி ஒதுக்கீடு
- முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
- மதுரையில் உலக தமிழ் கன்காட்சி அமைக்கப்படும்,

- அகழாய்வு, தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்
- தமிழ்நாட்டின் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும்
- ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்
- ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்
- ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு
- ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)
- ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்
- இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் - ரூ.21 கோடி
- ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
- கலைஞர் கனவு இல்லம் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள்
- முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம் மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு

- சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள்
- ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்! 29.74 இலட்சம் மக்கள் பயன்
- மகளிர் விடியல் பயண திட்டம் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு
- ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்
- சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்
- 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு
- வேளச்சேரியில் ரூ.310 கோடியில் புதிய பாலம்
இதையும் படிங்க: விறு விறுப்பான தமிழ்நாடு... காலையில் பட்ஜெட் மாலையில் திமுக எம்.எல்.ஏ. கூட்டம்!!