நாட்டின் அரசியலை மாற்றிய தொண்ணூறுகளின் மண்டல்-கமண்டல் அரசியலை யாரால் மறக்க முடியும்? இந்நிலையில் 2014 முதல் அசைக்க முடியாமல் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வரும் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்ள, காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை முழுமூச்சாகக் கிளம்பி 85 சதவீத வாக்குகளைப் பெற பந்தயம் கட்டத் தொடங்கி உள்ளனர். இதற்கு தெலுங்கானா மாநிலத்தில் பிள்ளையார் சுழி போட்டிருக்கிரது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்த பிறகு, ராகுல் காந்தி 50 சதவீத வரம்பை மீறி மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கி உள்ளார். 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் 99 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் வரிசையிலேயே அமர்ந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராகவே இருக்கும் ராகுல் காந்தி, பாஜகவின் இந்துத்துவாவை எதிர்கொள்ள புதிய திட்டத்தை கையுஇல் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்.. தெலங்கானாவை புகழ்ந்த ராகுல்..!
தெலுங்கானாவில், ராகுல் காந்தியின் அழுத்தத்தின் பேரில் 50 இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் பீகாரில், தேர்தலுக்கு முன்பு, மாநிலத் தலைவர் பதவி, அரசியல் ரீதியாக செல்வாக்குடைய அகிலேஷ் பிரசாத் சிங்கிடம் இருந்து தலித் தலைவர் ராஜேஷ் ராமிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அகிலேஷ் பிரசாத் சிங், லாலுவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். ஆனால், ராகுல் காந்தி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியும் தனது சொந்த வாக்கு வங்கியைப் போலவே தலித் வாக்கு வங்கியிலும் உரிமை கோருகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பே, ராகுல் காந்தி, கர்நாடகாவில் சாதி கணக்கெடுப்பை நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி அமைப்புச் செயலாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் நியமனங்களிலும் தனது சாதிய சமன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. உண்மையில், ராகுல் காந்தி தனது கண்களை எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினரின் 85 சதவீத வாக்குகளில் வைத்து இருக்கிறார்.

ராகுல் காந்தியின் உத்தி அதே மண்டல்-கமண்டல் அரசியலை நமக்கு நினைவூட்டுகிறது. இப்போது, காங்கிரஸ் இந்துத்துவா எதிர் சாதி அரசியல் மூலம் போராட்டத்தில் குதிக்கக் களமிறங்கி விட்டது. அதனால்தான் ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தெலுங்கானாவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக, நாடு முழுவதும் ராகுல் காந்தி நடத்தும் அரசியலமைப்பு மாநாடுகள் தலித்துகளை கவரும் நோக்கத்திற்காகவே நடத்தப்படுகின்றன. வக்ஃப் மசோதாவை வெளிப்படையாக எதிர்ப்பதன் மூலம், சிறுபான்மையினரை தனது பக்கம் வைத்திருக்க விரும்புகிறார்.கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு என்பது இரண்டாவது படி.

ராகுல் காந்தி இப்போது தனது அரசியலில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். அவர் தனது சொந்தக் கட்சியின் உயர் சாதித் தலைவர்களின் அழுத்தத்தைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை. ஆனாலும், ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கை, சாதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திமுக போன்ற கட்சிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதையும் படிங்க: அடிக்கடி வியட்நாமுக்கு சிட்டாகப் பறக்கும் ராகுல் காந்தி.. வியட்நாம் பாசம் குறித்து பாஜக சுளீர் கேள்வி!!