×
 

ரஜினி மீதான காதல் குற்றச்சாட்டு...! நீண்ட நாள் கிசு கிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை லதா..!

நடிகர் ரஜினியை குறித்து முழுவதுமாக கூறி காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நடிகை லதா.

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இன்று எத்தனை தலைமுறைகள் கடந்து சென்றாலும் ரஜினியை பிடிக்காத ரசிகர்கள் இருக்கவே முடியாது. இப்படி பல பேரும் புகழும் சம்பாதித்த ரஜினிக்கு கஷ்டமே வராது என நினைத்தால் அதுதான் தவறு. நடிகர் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைப்பதாக சொன்னவுடன் அவரது ரசிகர்கள் அவரை நினைத்து வேதனை பட ஆரம்பித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த ரஜினி எனக்கு எனது ரசிகர்கள் தான் முக்கியம் என கூறி அரசியலை விட்டு மீண்டும் நடிக்க வந்தார். அடுத்ததாக அவரது மகள் ஐஸ்வர்யாவை குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் வேதனை பட்டு வருகிறார். இப்படி இருப்பவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கிசுகிசுக்களில் சிக்கினார் எனறால் நம்ப முடிகிறதா.   

1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.

இதையும் படிங்க: அடுத்த ஜென்மத்தில் பழிவாங்க வந்த நீலாம்பரி..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் செல்பி எடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார். 

இந்தநிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு இயக்குனர்கள் இரண்டு படத்தை இயக்கி வருகின்றனர். ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது. அதனை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்பொழுது ஜெயிலர் 2 படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதில் தற்பொழுது ரஜினி நடித்து வருகிறார்.   

இப்படி இருக்க, வயதானலும் இன்றும் பல ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினிக்கு அன்று ரசிகர் பட்டாளம் என்பது மக்களிடம் மட்டுமல்லாது ஹீரோயின்களிடமும் இருந்தது. அதனால் பல சிக்கல்களில் சிக்கினார் ரஜினி எனவும் கூறப்படுகிறது. பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும் ரஜினியிடம் நம்பிக்கை மற்றும் நட்புரீதியாக நடிகைகள் பழகுவதுண்டு. அவருடன் இருப்பது பாதுகாப்பாக உள்ளது எனவும் பல பேர் கூறியுள்ளனர்.

ஆனால் இதனை பார்க்கும் பலரும் உடனே ரஜினியை குறித்தும் அந்த நடிகையை குறித்தும் கிசு கிசுத்து விடுவர். அந்த வகையில், ஒரு காலத்தில், நடிகர் ரஜினிக்கும், நடிகை லதாவுக்கும் காதல் இருந்ததாகவும் இந்த தகவலை அறிந்த மறைந்த நடிகர் எம்ஜிஆர், தன்னுடைய ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்து காட்டமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்கள் இருவரின் நீண்ட நாள் கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை லதா. சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த லதா. அதில், "ரஜினிகாந்த் மிகவும் நல்லவர் அதுமட்டுமல்லாமல் என்னுடைய நல்ல நண்பர். இந்த கிசு கிசு காலகட்டத்தில்  ரஜினிகாந்த் வளர்ந்துவரும் நடிகராக இருந்தார். ஆனால் நான் அப்போதே பிரபலமாக இருந்தேன்.

அதிலும் சூப்பர் ஸ்டார் ஜோடி என நயன்தாரா பெயர் எடுத்ததை போல் நான் எம்ஜிஆர் ஹீரோயின் என்று பெயர் எடுத்திருந்தேன். நான், ரஜினிகாந்த், மஞ்சுளா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த 'ஆயிரம் ஜென்மங்கள்' திரைப்படத்தின் ஷூட்டிங் ஆழியார் அணைக்கட்டில் நடந்தது. அப்போதே விஜயகுமாரும், மஞ்சுளாவும் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ரஜினியும் அப்போது எங்களுடன் பழகினார். மாலை நேரம் வந்தால் எங்களுடன் வந்து அமர்ந்து கொண்டு சகஜமாக பேசுவார். அடுத்ததாக கோயிலுக்கும் ஒன்றாக போவோம் அவ்வளவு தான். 

இதனை பார்த்த சில நல்ல உள்ளங்கள்,  என்னையும் ரஜினியையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கட்டு கதைகளை சொல்வார்கள். ஆனால் அதிலெல்லாம் கொஞ்சம் கூட உண்மையில்லை. அதனை யாரும் நம்பவும் வேண்டாம். அவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த மனிதர். இப்போது அவர் உலகளவில் மிகப்பெரியா ஸ்டாராக இருக்கிறார்.

அவரது புகழ் வானளவில் இருக்கிறது. ஆனாலும் அதை  தன்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ளவே மாட்டார். அப்போது எப்படி பழகினாரோ அப்படித்தான் இப்போதும் எங்களுடன் பழகி கொண்டு இருக்கிறார். அதன் காரணமாகத்தான் எனக்கு ரஜினிகாந்த்தை மிகவும் பிடிக்கும்" என்றார்.

இதையும் படிங்க: "ஒரே வார்த்தையில் பறிபோன ஆர்எம் வீரப்பன் பதவி"..! ஜெயலலிதாவை எதிர்த்த காரணத்தை அப்பட்டமாக உடைந்தார் - ரஜினிகாந்த்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share