×
 

பரமேஸ்வரி பாட்டியின் என்ட்ரி.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் இந்த சீரியலின் இன்றைய அப்டேட்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி கல்யாண மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரமேஸ்வரி பாட்டியை பார்த்த சாமுண்டேஸ்வரி உங்களை யார் உள்ள விட்டது? நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? வெளியே போங்க என்று சத்தம் போடுகிறாள். 

ரேவதி உனக்கு மட்டும் பொண்ணு இல்ல. என் பையன் ராஜராஜனோட பொண்ணு, என்னோட பேத்தி. நீ கூப்பிட்டாலும் கூப்பிடலானாலும் நான் கல்யாணத்திற்கு வருவேன். என் பேத்தியோட கல்யாணத்தை பார்க்க வந்திருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: மகேஷ், மாயாவுக்கு வரும் சந்தேகம்.. சாமுண்டீஸ்வரியின் கணக்கு என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

இப்படியே இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது, பாட்டி இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, என் பேரனுக்கு என் பேத்தியை கட்டி கொடு என்று சொல்கிறார் பரமேஸ்வரி பாட்டி. 

ஆனால் சாமுண்டேஸ்வரி அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்ல என்று கோபப்படுகிறாள். இதனை தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி ராஜராஜனிடம் அருண் ஆனந்தை அறிமுகம் செய்து வைக்கிறார். கார்த்திக் ஏன் பாட்டி இப்படியெல்லாம் பேசுனீங்க என்று வருத்தப்படுகிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படிங்க: சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கல்யாணத்தில் காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share