முகப்பருக்கள் வந்து சென்றால் அது சுவடாக நீண்ட நாள் தங்கி விடுவதோடு சில நேரங்களில் பள்ளங்களை ஏற்படுத்தி விடுகின்றன. என்னதான் மேக் அப் போட்டு மறைக்க முற்பட்டாலும் அது முடியாமல் வெளிப்பட்டுவிடும். அழுக்குகள் தேங்க காரணமாகவும், முகத்தில் எண்ணெய் வழிய காரணமாகவும் உள்ளன. இதனை ஆரம்ப காலக் கட்டத்திலே சரி செய்தால் பின்னாளில் பெரிய பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும். நம் வீட்டிலுள்ள எளிய பொருட்களே அதற்கு போதுமானது.

முதலில் முகத்தில் பருக்கள் வந்தால் அதனை கிள்ளாமல் அப்படியே விட்டு விட வேண்டும். வேண்டுமென்றால், பன்னீர் சேர்த்து சந்தனம் குழைத்து அதன் மேல் பூசி வரலாம். கஸ்தூரி மஞ்சள் கொண்டும் அதன் மேல் பூசி வரலாம். இவ்வாறு செய்தால் பருக்கள் விரைவில் காய்ந்து பின்பு கொட்டிவிடும், நாளடைவில் தழும்பும் மறைந்து விடும்.
இதையும் படிங்க: தயிர் ஒன்னு இருந்தாலே போதும், ஸ்கின்னு சும்மா மின்னும்...

வீட்டிலேயே ஸ்கரப் செய்து முகத்தில் உள்ள பள்ளங்கள் மீது தடவி வரலாம். அதற்கு கடலை மாவு, சிறிதளவு தயிர், எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து அந்த விழுதை முகத்தின் மீது தடவ வேண்டும். ஒரு 15 நிமிடம் காய்ந்த பிறகு அதனை வட்ட வடிவில் தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் விரைவில் முகத்திலுள்ள பள்ளங்கள் மறையும், சருமம் மிருதுவாகும்.

தினமும் 5 நிமிடம் ஒரு வேளையாவது ஐஸ் கட்டி கொண்டு நன்றாக முகத்தை தேய்க்க வேண்டும். ஐஸ் கட்டியால் வட்ட வடிவில் தேய்த்துக் கொடுக்க தோலில் உள்ள ஓட்டைகள், பள்ளங்கள் அனைத்தும் மூடிக்கொள்ளும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால் புது தோல் உருவாகி சருமம் ஜொலிப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

தக்காளி சாறு கொண்டு முகத்தில் பூசி, பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவிடலாம். தக்காளியில் உள்ள ஜின்க் தோலுக்கு வழுவழுப்பை கொடுத்து ஜொலிக்க வைக்கும். மேலும் கொலாஜன் உற்பத்தியை தூண்டி பள்ளங்களை மறையச்செய்யும்.

முல்தானி மெட்டி, அரிசி மாவு, தயிர், சோற்றுக் கற்றாழை சேர்த்து குழைத்து அதனை முகம் முழுக்க பூசி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி ரோஸ் வாட்டர் கொண்டு ஸ்பிரே செய்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் முகத்தில் பள்ளங்கள் மறைந்து, சருமம் புதுப் பொலிவுடன் அழகாக இருக்கும்.
இவ்வாறு எளிய முறையில் நாம் செய்து வந்தால் பள்ளங்கள் என்பதே இல்லாமல் முகம் சீராக வழுவழுப்பாக என்றும் அழகாக ஜொலிக்கும்.
இதையும் படிங்க: முகம் என்றும் இளமையுடன் இருக்கணுமா ? இதை பண்ணி பாருங்க