கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைக்காலம் நீங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 454 திசை படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் அனுமதியுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தொடங்கிய கட்சத்தீவு திருவிழா.. படகில் படையெடுத்த தமிழக பக்தர்கள்!

கைது செய்த 11 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இலங்கை கடற்படையினர் அத்துமீறி செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவ ராமேஸ்வரம் மீனவர்கள், இந்த சம்பவம் அவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு விரைந்து இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குடையை மறந்துடாதீங்க மக்களே.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அளித்த அறிவிப்பு!