கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் எத்தனை அழகூர் ஆன சிறப்புகள் அமைந்திருந்தாலும், அதே அளவிற்கான ஆபத்துகளும் நிறைந்தே இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இலங்கைப் பிடியில் இருக்கும் கச்சதீவில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கு தமிழக பக்தர்களும் இலங்கை பக்தர்களும் ஒன்று கூடி வழிபாடு செய்வர். அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் அதாவது மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திருவிழாவிற்கு செல்லும் வழக்கத்தை கொண்ட தமிழக பக்தர்கள், இந்த ஆண்டு 82 விசைப்படகுகள் 23 நாட்டுப்புறங்களில் பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: மார்ச் 14 ஆம் தேதி கச்சத்தீவு திருவிழா.. ஏற்பாடு பணிகள் தீவிரம்!
இந்த நிலையில் திருவிழாவின் முதல் நாளான இன்று, ஆலயத்தில் அதிகாலையிலேயே பாடல்கள் பாடி மெழுகுவர்த்தி ஏந்தி கோலாகலமாக திருவிழா துவங்கியது. இதனை எடுத்து காலை முதல் தமிழக பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து வடகில் புறப்பட்ட சென்றனர். பக்தர்களின் உடைமைகளை போலீசார் ஆய்வு செய்து பின்னர் ஒரு படத்திற்கு 40 பேர் என்றும நாட்டுப் படகில் 18 பேர் என்ற விகிதம்படி பயணம் செய்ய அனுமதித்தனர்.
இதையும் படிங்க: குடையை மறந்துடாதீங்க மக்களே.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அளித்த அறிவிப்பு!