நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 8.21 லட்சம் பேர் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4.24 லட்சம் பேர் மாணவிகள், 3.78 லட்சம் பேர் மாணவர்கள் ஆவர். மேலும், தனித் தேர்வர்கள் 18,344 பேர், கைதிகள் 145 பேர் ஆவர்.

மொத்தம் 3,316 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும் வகையில் 4,800 பறக்கும் படைகள் தயாராக உள்ளனர்.
இதையும் படிங்க: நாளை தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...!

தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075 அல்லது 9498383076 ஆகிய கட்டுப்பாட்டு அறை உதவி எண்களுக்கு அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி உள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடக்கின்றன. மேலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறவுள்ளன.

பொதுத்தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், பாதுகாப்பை உறுதி செய்திடவும் அடிப்படை வசதிகளை போதிய அளவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...!