புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்து வந்தார், இதையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், அவர் Accenture-ல் என்ற IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
அதன்பின் அந்த நபர் சிவனேஷிடம் தேர்வு கட்டணம், செயலாக்க கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை டெபாசிட் செய்யுமாறு கூறினார். அவர் கூறியதை நம்பிய, சிவனேஷ், அவர் கூறிய வங்கி கணக்கிறக்கு ரூபாய் 1,73,994/- பணத்தை பல்வேறு தவணைகளாக செலுத்தியுள்ளார்.

அதன்பிறகு சிவனேஷ், அவர்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தபொழுது தொடர்புகொள்ள இயலவில்லை. அதன்பிறகு இணையவழி மோசடிக்காரர்களால் தான் ஏமாற்றபட்டத்தை உணர்ந்த சிவனேஷ் இது சம்பந்தமாக இணைய வழி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா மற்றும் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். குற்றவாளிகளின் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், அந்தக் கணக்குகள் பர்வீன் மற்றும் கவுரவ் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் Faridabath என்னும் ஹரியானா பகுதியை சார்ந்த நபர்கள் என்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: 5 பைகளில் கட்டுக்கட்டாய் பணம்.. மிஷின் வைத்து எண்ணிய அதிகாரிகள்.. முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனம் சீல்..!

தொடர்ந்து குற்றவாளிகள் செல்போன் எண்கள் ட்ரேஸ் செய்த போலீசார், தனிப்படை குழு அமைத்து டெல்லி சென்று சைபர் குற்றவாளிகளான பர்வீன் மற்றும் கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
விசாரணையில் பார்வீன், 1 சிம் கார்டு 500 ரூபாய்க்கும், ஒரு வங்கி கணக்கு 5000 ரூபாய்க்கும் என பல்வேறு சிம் கார்டு மற்றும் 100 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கவ்ராவ் என்பவரிடம் பணத்திற்காக விற்றுள்ளார். கவுரவ் என்பவர் 2019 ஆம் ஆண்டில் நொய்டா மாநிலத்தில் வேலை வாய்ப்பு மோசடி செய்யும் Call Center-இல் 6 மாதம் வேலை செய்துள்ளார்.
அதன் பிறகு கோவிட் காலத்தில் கவுரவ் மற்றும் சந்தீப் ஆகிய இருவரும் பரிதாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சொந்தமாகவே Call Center ஐ ஆரம்பித்து, வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1000 த்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அடிக்கடி தனது கால் சென்டர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பர்வீன் மற்றும் கவ்ராவ் ஆகிய இருவரையும் புதுச்சேரி தலைமை நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் உடனடியாக சைபர் குற்றத்திற்கான கட்டணமில்லா எண் 1930. இணையதளம்: cybercrime.gov.in, லேண்ட்லைன்: 04132276144/9489205246 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்
இதையும் படிங்க: ரெஸ்டாரெண்ட் போறீங்களா? உஷார்..!! பர்கரில் வேகாத கோழிக்கறி.. குழந்தைக்கு வாந்தி, மயக்கம்..!