ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது பிரவீன் என்பவர், "அந்தியூரைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி ஒருவர் தங்களுக்கு அதிமுக கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை எனப் புகார் தெரிவித்தார்.
புகார் கூறிய பிரவீனை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி கீழே இறக்கிவிட்டனர். இதனையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு கூச்சல் குழப்பமானது.

இதனை தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "தற்போது பிரச்சினை செய்தவர் அதிமுக நிர்வாகியே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அந்தியூரைச் சேர்ந்த இ.எம்.ராஜாதான். அவரது ஏற்பாட்டில்தான் இந்த நபர் இங்கு வந்து பிரச்னை செய்துள்ளார்.
கடந்த தேர்தலின்போது, அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பேசியவர் இ.எம்.ராஜா. அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட துரோகத்தை செய்தவர், இப்போது குழப்பத்தை ஏற்படுத்த ஆட்களை அனுப்பியுள்ளார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்" என்று கூறினார். அண்மைக் காலமாக செங்கோட்டையனை வைத்து சலசலப்புகள் உருவாவதால், இன்றைய நிகழ்வும் அவருடைய பேச்சும் அதிமுகவில் உற்று நோக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த மனுசனுக்கு நாக்குனு ஒண்ணு இருக்கா..? எடப்பாடியாரை குறி வைத்து குதறும் திமுக அமைச்சர்..!
இதையும் படிங்க: 'அதிமுக, தவெக கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்கும் பாஜக' - அனல் கிளப்பும் அண்ணாமலை..!