தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ளனர். ஆனால், அதிமுக மட்டும் செய்வதறியாது திகைத்து, அமைதியாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இரா.முத்தரசன் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தமிழக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கேரள மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பாஜகவின் நிர்பந்தம் காரணமாகவே தமிழக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசி வருகிறார். தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ளனர். ஆனால், அதிமுக மட்டும் செய்வதறியாது திகைத்து, அமைதியாக உள்ளது.
இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!
பாஜகவுடன் பகை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே நீட் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார். இவற்றுக்கு பாஜகவின் நிர்பந்தமே காரணம். தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்பதால் சீமானை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது" என்று முத்தரசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவியை உடனே வீட்டுக்கு அனுப்புங்க.. மத்திய அரசுக்கு சிபிஎம் அட்வைஸ்.!