குஜராத்தின் நான்கு முக்கிய நகரங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என சந்தேகிக்கப்படும் குறைந்தது 2,024 பேர் விசாரணையில் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கிய ஒரு நடவடிக்கையில், குஜராத் காவல்துறை 1,024 பேரை கைது செய்தது. குஜராத் மாநிலத்தின் இரண்டு முக்கிய நகரங்களான அகமதாபாத், சூரத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

அகமதாபாத்தில் 890 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 134 பேர் சூரத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. பின்னர், விசாரணையில் உள்ள 800 பேரில் 10 பேர் ராஜ்கோட் நகர காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், வதோதராவில், நகர காவல்துறை 200 பேரை சுற்றி வளைத்தது, ஆனால் அவர்கள் விசாரணையில் மட்டுமே இருப்பதாகவும், தடுப்புக்காவலில் இல்லை என்றும் கூறியது.
இதையும் படிங்க: நான் வாழ்கிறேனோ இல்லையோ நாடு முக்கியம்... அடியோடு மனம்மாறிய காங்கிரஸ் தலைவர்..!

அகமதாபாத்தில், கைது செய்யப்பட்ட நபர்கள் நகரின் சாலைகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கன்காரியா கால்பந்து மைதானத்திற்கும், குற்றப்பிரிவின் கெய்க்வாட் ஹவேலி தலைமையகத்திற்கும் இடையிலான தூரம் வரை அவர்களது அணிவகுப்பு இருந்தது. காவல்துறையினரால் அணிவகுப்பு நடத்தப்பட்டதை ட்ரோன்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 457 ஆண்கள், 219 பெண்கள் மற்றும் 214 குழந்தைகள் அடங்குவர் என்று அகமதாபாத் நகர காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதுரை குஜராத் காவல்துறை எடுத்த நடவடிக்கையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேசிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை நடந்து வருகிறது. இந்த விரிவான நடவடிக்கையில் மொத்தம் 2200 பேரைக் கைது செய்துள்ளனர். குஜராத் தனது நிலத்தை சட்டவிரோத ஊடுருவல்காரர்களிடமிருந்து மீட்டு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, ''நள்ளிரவு நடவடிக்கையை குஜராத் காவல்துறைக்கு "வரலாற்று வெற்றி.. இதுதான் குஜராத் மாடல்" என்று கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டினரை திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு எடுத்த முடிவு, வங்கதேச நாட்டினருக்கு எதிரான குஜராத்தின் நடவடிக்கை ஆகியவற்றை ஒப்பிட்டு, சங்கவி கூறுகையில், “பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவின்படி, பாகிஸ்தான் நாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று குஜராத் காவல்துறை தெளிவான அறிவுறுத்தல்களைக் கொண்டுள்ளது. இன்றிரவுக்குள், அனைத்து பாகிஸ்தானியர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதேபோல், எந்தவொரு நாட்டிலிருந்தும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மாநிலத்தில் தங்கக்கூடாது என்பது மாநில அரசின் பொறுப்பாகும், குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேலின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை மாற்றம்... அதிகாரப்பூர்வ இலாகாக்கள் அறிவிப்பு... செந்தில் பாலாஜி- பொன்முடி விடுவிப்பு..!