பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.

அந்த வகையில், பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கலைத்துறையில் செய்த சாதனைக்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கார் ரேசிங்கின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. தற்போதைய நிலைமை..?

இந்த நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பத்மபூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்.

இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல் எதிரொலி..! இன்று கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்..!