தமிழ்நாட்டையே உலுக்கிய மிக முக்கியமான குற்ற சம்பவங்களில் ஒன்றாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு அதிமுகாவினுடைய ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியே சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த வழக்கு போலீஸ் வசமிருந்து சிபிஐடிக்கு மாற்றப்பட்டு பின்பு அது சிபிஐ சிபிஐ வசம் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கிட்டத்தட்ட 2019 ஆம் ஆண்டு மட்டும் பொள்ளாச்சியை சார்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹேரன் பால், பைக் பாபி என்கிற பைக் பாபு, அருளானந்தம் உள்ளிட்டோர் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். மொத்தம் ஒன்பது பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிஐ நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கினுடைய விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் பெரும்பாலும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவே நீதிபதி முன்பாக ஆஜராகி இருந்தார்கள். அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவு பெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரிடம் சட்ட விதிகள் 13ன் கீழ் கேள்விகள் கேட்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் நீண்ட காலமாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான அவர்கள் நேரடியாக சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

அதன் அடிப்படையில் அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் இருப்பிட மருத்துவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஆகியோரிடம் இறுதியாக விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மகளிர் நீதிமன்றம் தற்பொழுது மே 13 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: ஜாம்பவான் கட்சியெல்லாம் அதிமுகவுடன் வருது.. வேலையும், பணமும் மிச்சம்.. வாய் பிளக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..!
இதையும் படிங்க: மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்! முதலமைச்சர் முன்னிலையில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம்...