தொட்டு அளவெடுத்த டெய்லர்.. சங்கடத்தில் நெளிந்த மாணவி.. தட்டிக்கேட்காத ஆசிரியர், டெய்லர் போக்சோவில் கைது..!
மதுரை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு யூனிபார்ம் தைக்க அளவெடுக்க ஆண் டெய்லரை பணியமர்த்திய கொடூரம்.. மாணவி மறுத்தும் வற்புறுத்திய ஆசிரியர் போக்சோவில் கைது..
மதுரை எம் கே புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக டெய்லரை வரவழைத்து அளவெடுக்க முடிவு செய்தனர். அதன்படியே ஒரு ஆண் டெய்லரை வரவழைத்து அளவெடுக்கும் வேலையும் கடந்த 2, 3 தினங்களாக நடந்தது. நடுத்தர வயது ஆண் டெய்லர் ஒருவர் பள்ளிக்கு வந்து, மாணவர்கள், மாணவிகள் என அனைவருக்கும் அளவெடுத்தார். அதை குறித்துக் கொள்ள ஒரு பெண்ணும் வந்திருந்தார். மாணவிகளுக்கு டெய்லர் அளவெடுக்கும் போது, உடல் பாகங்களில் கை பட்டதாக கூறப்படுகிறது.
இதனல் பல மாணவிகள் சங்கோஜத்தில் நெளிந்தனர். ஆனால் ஆசிரியர் மேற்பார்வையில் இது நடந்ததால் எதிர்த்து பேச முடியாமல் வாயடைத்து நின்றனர். ஆனால் அதில் ஒரு மாணவிக்கு இதில் விருப்பம் இல்லை. அந்த மாணவி கொந்தளித்து எழுந்தார். 10 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, மாணவிகளுக்கு எதற்கு ஆண் டெய்லர் மூலமாக அளவெடுக்க அனுமதிக்கிறீர்கள்? என ஆசிரியையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் ஆண் டெய்லர் அளவு எடுத்தால் தன்னால் அளவு எடுக்க முடியாது என பள்ளி ஆசிரியை இடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் பணியிட மாற்றம்.. ஆசிரியர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!
ஆனாலும் ஆசிரியை ) கட்டாயம் அளவு எடுத்துதான் ஆக வேண்டும் என மாணவியிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி, தான் அடுத்தாண்டு இந்த பள்ளியில் படிக்க போவதில்லை? எனவும் ஏன்? எனக்கு அளவு எடுக்க வேண்டும்? கேட்டு சண்டை பிடித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் மாணவி முறையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பள்ளி நிர்வாகத்தினர் Just Freeயா எடுத்துக்கோ என மாணவியிடம் கூறியுள்ளனர். இதனையடுத்தும் ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும் போது தனது அனுமதியின்றி உடல் பாகங்களை தொட்டதாக மாணவி ஆசிரியை யிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் ஆசிரியை அதை அலட்டிக்கொள்ளவில்லை என தெரிகிறது. மனம் குமறியபடியே வீட்டுக்கு சென்ற மாணவி, பெற்றோரிடம் நடந்ததை சொன்னார். பெற்றோர் ஆத்திரத்தில் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிக்கு சீருடை தைக்க வந்த டெய்லர், மாணவிகளின் உடல் பாகங்களை் தொட்டு டெய்லர் அளவெடுத்தார். இதுபற்றி நான் என் வகுப்பு ஆசிரியையிடம் புகார் சொன்னேன். இவ்வளவு பேர் அளவெடுத்துக் கொள்கிறார்கள். நீ ஏன் பிரச்னை பண்ணுகிறாய்? நீயும் அளவு எடுத்துக் கொள் என ஆசிரியை சொல்லி விட்டார்.
டெய்லரும், ஒரு பெண்ணும் சேர்ந்து வலுக்கட்டாயமாக எனக்கு அளவெடுத்தனர். அப்போது என் உடல்பாகங்களை டெய்லர் தொட்டார். எனவே, டெய்லர் மீதும், அவருடன் வந்த பெண் மற்றும் கட்டாயப்படுத்திய வகுப்பு ஆசிரியை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி தனது புகாரில் கூறியிருந்தார். மாணவி புகாரின் அடிப்படையில், ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண், 10ம் வகுப்பு ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியது. அதைத் தொடர்ந்து, இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளிடம் ஆண் டெய்லரை சீருடைக்கு அளவெடுக்க சொன்ன பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது அமைதிக்கு குந்தகம்ஏற்படுத்தாமல் கலைந்து போகும்படி அவர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால், மாணவர் அமைப்பினர் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷங்களை முழங்கினர். அப்போது, மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்த முயன்றதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் மாணவர் அமைப்பை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களை
கைது செய்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளி முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவி, நண்பரை பார்க்க வெளியில் சென்றபோது அவரை நண்பர் உள்ளிட்ட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
விஷயம் தெரிந்ததும் பெற்றோரை வரவழைத்த பாலிடெக்னிக் நிர்வாகம், மாணவிக்கு டிசி கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்யாமல் பாதிக்கப்பட்ட மாணவி மீதே பாலிடெக்னிக் நிர்வாகம் பழிபோடுவதாக என கொந்தளித்த இந்திய மாணவர் கூட்டமைப்பினர் பாலிடெக்னிக் வளாகத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் மாணவர் அமைப்பினருக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 12ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனையின் போது சில்மிஷம்: போக்சோவில் ஆசிரியர் கைது.!