117/117 கேட்கும் விஜய்..! 60 ஐ தாண்டாத எடப்பாடி.. சேருமா? சேராதா?
தவெக தலைவர் விஜய் தனக்கு மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 50 சதவீத சீட்டுக்கள் வேண்டுமென கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கட்சியாக உருவெடுத்துள்ளது, தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் தலைமையிலான, இந்த கட்சியில் பல லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கூட்டத்தைக் கூட்டி அசத்தி விட்டார்கள் தவெக கட்சியினர். அந்த மாநாட்டிற்கு பிறகு விஜயின் அரசியல் கட்சிக்கு சற்று மவுசு கூடி தான் போனது. ஒரு பக்கம் பெரிய அளவில் ஆதரவு அலை இருக்கிறது என்றும் மற்றொரு பக்கம் சுத்தமாக ஆதரவில்லை, இது எந்த நடிகருக்கும் வரக்கூடிய கூட்டம் தான், என்ற பேச்சும் பரவலாக தமிழகத்தில் உள்ளது.
இதையும் படிங்க: தவெகவில் 40 பேர்தான் ரெடி… அதிமுக கூட்டணிதான் சரி... பி.கே எண்ட்ரி… விஜய்க்கு முட்டுக்கட்டை..!
இந்த நிலையில் விஜய் தனது கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியை கடந்த ஆறு மாத காலமாகவே தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி கட்சியை பலப்படுத்துமாறு கூறி வருகிறார். இப்படி கட்சி தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின் போது வந்து கட்சிக்குள் இணைந்தவர் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா. இந்தியாவின் பிரபலமான வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து விஜயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் நேராக அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்று சந்தித்தது தான் ஹைலைட் ஆகிப்போனது.
மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த சந்திப்பு எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. கூட்டணி பலம் இல்லாமல் நிச்சயமாக அதிமுகவோ அல்லது விஜயின் தவெகவோ தமிழகத்தில் வெற்றி பெறவே முடியாது என்பதுதான் கள நிலவரம் என்பதை பிரசாந்த் கிஷோர் இருவரிடமும் விளக்கி கூறிவிட்டாராம்.
இதனை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்ட இரு கட்சித் தலைவர்களும் எண்ணிக்கை ஒத்து வந்தால் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கலாம் என தெரிவித்திருக்கிறார்களாம். அந்த வகையில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனக்கு மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சரி பாதி அதாவது 50 சதவீத சீட்டுக்கள் வேண்டுமென கேட்கிறாராம். 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட விருப்பப்படுகிறோம் என விஜய் கேட்கிறாராம். இதை எடப்பாடியிடம் தெரிவித்த தூதுவர்கள் இதெல்லாம் சாத்தியமான விஷயமா? என சிந்தித்துப் பேசுங்கள், அதிமுக என்பது ஆலமரம் என்பதை மறந்து விடாதீர்கள் என்று மட்டும் சொல்லிவிட்டாராம்.
தவெக தரப்பிலோ இது பற்றி எல்லாம் அறியாமல் இல்லை என்று சொல்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 117 ஆரம்பித்தால் தான் அது ஒரு நூறு அல்லது 60 இல் முடியக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் எனவேதான் சீட்டுகளை எண்ணிக்கையை முதலில் கேட்கும் போதே அதிகப்படுத்தி கேட்கிறார்கள் என கூறுகிறார்கள். அந்த வகையில் அதிமுக தரப்பில் அதிகபட்சம் 60 சீட்டுகளும் குறைந்தபட்சம் 40 சீட்டுகள் வரை விஜய்க்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது என்று விவரம் அறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மக்கள் பிரச்சனையை கையிலெடுங்க..! கட்சியை சரி செய்யுங்க.. விஜய்யிடம் சொன்ன பிகே.. என்ன நடந்தது பேச்சு வார்த்தையில்?