#BREAKING: குஜராத் பட்டாசு ஆலையில் தீ விபத்து..! 18 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்..!
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா என்னும் இடத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா என்னும் நகரில் உள்ள தீபக் டிரேடர்ஸ் என்னும் பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறிய அளவிலான தீ விபத்து மள மளவென பரவி ஒட்டுமொத்த பட்டாசு ஆலை மற்றும் குடோனில் தீப்பிடித்து பிழம்பாக எரிய ஆரம்பித்தது, தற்போது வரை 18 பேருந்து தீவிபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்.. ரூ.100 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்.. துபாய் முதலீட்டாளருக்கு வலை..!
தீபக் ட்ரேடர்ஸ் பட்டாசு ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, தீ விபத்தின் தீவிரமும் அதன் விளைவாக ஏற்பட்ட தீப்பிழம்பும் கட்டிடத்தின் சில பகுதிகளை ஒட்டுமொத்தமாக இடித்து கீழே தள்ளி உள்ளது.
தீப்பிடித்து எறிந்த பட்டாசு ஆலை உள்ள பகுதி முழுவதுமே போர்க்களம் போல தற்போது காட்சியளிக்கிறது, பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பிடித்து எறியும் போது மேற்கூரை மற்றும் ஸ்லாப் ஆகியவை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளுக்குள் மத்தியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர் மிகிர் பட்டேல் தெரிவித்துள்ளார்.காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் ஆறு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
பாய்லர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என உறுதியாக நம்பப்படுகிறது தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டு குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வந்தன இந்த நிலையில் மீண்டும் சேதமடைந்த கட்டிடத்தில் பல பகுதிகள் இடிந்து விழுந்ததால் மீட்பு பணியில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாரின் மீட்பு பணிகளில் உதவுவதற்காக மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 18 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளதால் அந்த பகுதியே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதையும் படிங்க: ‘நாங்கள் அப்பாவி..! குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன’.. பிரமதர் மோடி ஓபன்டாக்..!