×
 

மெட்ரோவில் வேலை வேணுமா? 20 லட்சம் செலவாகுமே..! நீதிபதி பெயரில் பயிற்சி வக்கீல் மோசடி..!

சென்னையில் நீதிபதியாக இருப்பதாகவும், மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் வரை சிறுக சிறுக பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு நாகாலுத்து தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்பவர். இவரின் மகன் அருண் சூர்யா என்பவர் சட்டம் படித்தவர். சென்னையில் ஒரு வழக்கறிஞர் இடம் உதவியாளராக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் அரசு போக்குவரத்துத்துறை பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். பேருந்து நடத்துனரான மோகன் என்பவர் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் குடும்பத்தாருடன் நாகாலுத்து தெருவை சேர்ந்த வழக்கறிஞரின் தந்தையான ராஜேந்திரரிடம் குழுவாக சென்று பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வரும்போது நெருங்கி பழகி உள்ளனர். 

ராஜேந்திரன் மூலம் அவர் மகன் அருண் சூர்யாவுடன் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், படித்து முடித்து விட்டு வேலைதேடி வரும் அவரின் மகனுக்கு வேலை வாங்கி தரும்படி உதவி கேட்டுள்ளார். அருண் சூர்யா, நான் சென்னையில் நீதிபதியாக இருக்கிறேன் எனவும் மெட்ரோவில் தற்போது மேலாளராக மணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும் நான் சிபாரிசு செய்தால் சுலபமாக கிடைத்துவிடும் எனவும் மோகனிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் பணிக்காக 6 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறிய அருண் சூர்யா, மோகனிடம் பணத்தைப் பெற்றுள்ளார்.  

இதையும் படிங்க: இரவில் செக்யூரிட்டி வேலை.. பகலில் ஹெராயின் விற்பனை.. கில்லாடி வடமாநில இளைஞன் கைது..!

பணத்தை பெற்றவுடன் உடனடியாக வேலை கிடைக்கும் என கூறி சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வேலைக்காக நேர்காணல் இருப்பதாக இருவரையும் சென்னைக்கு வர சொல்லி இருக்கிறார். இருவரும் அங்கு வந்த நிலையில், அருண் சூர்யா அங்கு வராமல் உங்களுக்கு பணி ஆர்டர் கிடைத்துவிட்டது என ஏமாற்றி உள்ளார். பின் பணிக்கு உயர் அதிகாரிகள் கூடுதல் பணம் கேட்கிறார் என்று ஜிபே மூலம் சிறுக சிறுக 9 லட்சம் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வாரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்காமல் இருந்துள்ளார். 

பதற்றமடைந்த மோகன், ராஜேந்திரன் நேரடியாக வீட்டுக்கு சென்று பணத்தை தரும்படி கேட்டு இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வா என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து மோகன் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று வேலை வாங்கித் தருவதாக நீதிபதி என்று பொய் சொல்லி ஏமாற்றி இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அருண் சூர்யாவை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவரும் உண்மையை ஒப்புக்கொண்டர்.

மேலும் இது போல் இரண்டு நபர்களுக்கு மேல் வேலை வாங்கி தருவதாக 20 லட்சம் வரை ஏமாற்றியுள்ளதாகவும் ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த நிலையில், பணத்தை திருப்பி அளிக்க முடியாததால் அருண் சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிபதி போர்வையில் போலியாக நடித்து நாடகம் ஆடிய பயிற்சி வழக்கறிஞர் மெட்ரோவில் வேலை வாங்கித் தருவதாக 20 லட்சம் வரை ஏமாற்றி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாணவி கர்ப்பம், வேறு பெண்ணுடன் திருமணம்.. புதுமாப்பிள்ளை பேராசிரியரின் காமலீலைகள் அம்பலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share